நயந்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யன் என முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில், ‘டீமாண்டி காலணி’ இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், ‘த்ரிஷா இல்லனா நயந்தாரா’ என்ற கமர்ஷியல் வெற்றிப் படத்தை தயாரித்த கேமியோ பிலிம்ஸ் சி.ஜே.ஜெயக்குமார் தயாரிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘இமைக்கா நொடிகள்’.
கடந்த இரண்டு ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த இப்படம் ரிலிஸின் போது பல பிரச்சினைகளை எதிர்க்கொண்டதோடு மட்டும் அல்லாமல், ரிலீஸ் தேதியில் இரவுக் காட்சியில் தான் ரிலிஸானது. டிலிஸான ஆரம்பத்தில் சற்று தடுமாற்றத்தை சந்தித்த இப்படம், அடுத்தடுத்த காட்சியில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று தற்போது முழு வெற்றிப் படமாக உருவெடுத்திருப்பதாக, படத்தின் தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார் கூறியுள்ளார்.
கலவையான விமர்சனங்களை எதிர்க்கொண்ட இப்படம் மிகப்பெரிய பொருட்ச்செலவில் உருவானதோடு, கால நேரத்தையும் அதிகமாக எடுத்துக்கொண்டது. தற்போது 2 வது வாரத்திலும் 360 திரையரங்கங்களில் வெற்றிகரமாக படம் ஓடிக்கொண்டிருப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வெற்றியைக் கொண்டாடும் விதத்திலும், ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதத்திலும் நேற்று ‘இமைக்கா நொடிகள்’ படக்குழு சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். எப்போதும் போல நயந்தாரா இல்லாமல் தான்.
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் சி.ஜே.ஜெயக்குமார், “பல பிரச்சினைகளை தாண்டி முதல் நாள் இரவுக் காட்சியில் தான் படம் ரிலீஸ் ஆனது. முதல் வாரத்தில் நல்ல வரவேற்புடன் 16 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறது, மேலும் 360 திரையரங்குகளில் 2வது வாரம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு இரண்டு சின்ன பட்ஜெட் படங்கள் தயாரித்திருக்கிறேன், இந்த கதையை கேட்டவுடனே பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்க முடிவு செய்தேன். ரசிகர்கள் மீது நம்பிக்கை வைத்து என் சக்தியையும் மீறி, கடன் வாங்கி தான் இந்த படத்தை தயாரித்தேன். ரிலீஸ் நேரத்தில் எனக்கு எல்லா வகைகளிலும் மிகவும் உதவிகரமாக இருந்தார் அன்புச்செழியன். அபிராமி ராமநாதன் பக்கபலமாக இருந்ததோடு சென்னை ஏரியாவில் படத்தையும் ரிலீஸ் செய்து கொடுத்தார்.
எல்லோரும் கேட்கும் ஒரே கேள்வி எப்படி அனுராக் காஷ்யாப்பை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தீர்கள். அப்படி எல்லா திரையரங்குகளிலும் ரசிகர்கள் அந்த 'ருத்ரா' கதாபாத்திரத்தை கொண்டாடி விட்டார்கள். குறைந்த காலத்திலேயே பின்னணி இசையில் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்தார். நயன்தாரா, அதர்வா, ராஷி கண்ணா ஆகியோர் மல்டி ஸ்டாரர் படம் என்பதையும் தாண்டி கதை பிடித்து போனதால் எந்த ஈகோவும் இல்லாமல் நடித்து கொடுத்தனர். அஜய் ஞானமுத்து அடுத்து இதை விட பெரிய, நல்ல படத்தை தருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.” என்றார்.
இயக்குநரும் இப்படத்தின் வில்லனுமான அனுராக் காஷ்யப் பேசும் போது, “ருத்ராவுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள் அனைத்தும் இயக்குநர் அஜய்க்கு தான் போய் சேர வேண்டும். அஜய் என்னை எமோஷனலாக அணுகினார். படத்தில் நடிக்க வந்த பிறகு பல நேரங்களில் ஷுட்டிங் நடக்க முடியாமல் தள்ளிப்போனது. 2 ஆண்டுகளாக இந்த படம் தயாரிப்பில் இருந்தது, அந்த நேரத்தில் கிடைத்த இடைவெளியில் நான் 2 படங்கள், 1 வெப் சீரீஸ் இயக்கி விட்டு வந்தேன். அஜய் இன்னும் பெரிய உயரத்தை அடைவார். மகிழ் திருமேனி சார் தான் ருத்ராவுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். சினிமா நன்றாக இருக்க, அபிராமிராமநாதன் சார் மாதிரி பலர் சினிமாவில் இருக்க வேண்டும்.” என்றார்.
நிகழ்ச்சியில் பேசிய அபிராமி திரையரங்க உரிமையாளர் அபிராமி ராமநாதன், திரைப்பட விநியோகஸ் அன்பு செழியன் ஆகியோர் படத்தின் வெற்றி குறித்தும், இயக்குநர் குறித்தும் பாராட்டி பேசியதோடு, ரிலீஸ் நேரத்தின் போது தயாரிப்பாளருக்கு எந்தவித சிக்கலும் ஏற்படாத வகையில் இயக்குர் படத்தை கையாண்டிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும், என்று கூறியதோடு, எதிர்காலத்தில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இப்படி ஒரு படத்தை இரண்டு வருடங்களாக எடுக்காமல் ஆறு மாதத்தில் முடித்துவிட வேண்டும், என்று அறிவுரையும் கூறினார்கள்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...