இருசக்கர வாகனத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் ‘வண்டி’ படத்தில் விதார்த் ஹீரோவாக நடிக்க, சாந்தினி ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
சூரஜ் எஸ் குரூப் இசையமைத்திருக்கும் இப்படத்தை ரஜீஷ் பாலா இயக்கியிருக்கிறார். ஹஷீர் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு பாடல்களை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் ஹீரோ விதார்த் பேசும் போது, ”பத்திரிக்கையாளர்கள் பாராட்டில் இன்று மேற்கு தொடர்ச்சி மலை 3வது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. விஜய் சேதுபதி, லெனின் பாரதி அளவுக்கு எனக்கும் மகிழ்ச்சி. வீரம் படத்தின் போது எனக்கு இந்த கதையை சொல்ல வந்தார்கள். ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குநர் 4 கேமரா வைத்தெல்லாம் படத்தை எடுத்தார்கள். இயக்குநர் ரொம்பவே கஷ்டப்படுத்தினார். எங்கள் எல்லோருக்கும் அவரை பார்த்தாலே பயம். காற்றின் மொழி படத்தில் ஜோதிகா உடன் நடிக்கும் போது இயக்குநர் ராதாமோகன் என் நடிப்பை பாராட்டி தள்ளினார். அதற்கு காரணம் இந்த படத்தில் நான் எடுத்த பயிற்சி தான். இந்த படத்தில் ஒரு ஃபிரேம் மாறினாலும் படம் புரியாது. அப்படிப்பட்ட ஒரு ஹைப்பர்லிங் படம்.
தயாரிப்பில் இருக்கும்போது சில பிரச்சினைகள் நடந்தது, அப்போது தேனப்பன் சாரிடம் சென்றேன். அவர் தான் இதை சுமூகமாக முடித்து வைத்தார். குப்பத்து ராஜா என்ற ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருக்கும்போது இந்த படத்தை ரிலீஸ் செய்ய முன் வந்தது பெரிய விஷயம். அது தான் படத்தின் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை.
இந்த படத்துக்கு சூரஜ் ஒரு பாட்டு போட்டுக் கொடுத்தார். இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட் பாடலாக அது
அமைந்திருக்கும். ஆனால் அது படத்தில் இல்லை. அந்த பாடலுக்கு எப்படியாவது நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன், ஆனால் அது கடைசி வரை நடக்காமல் போனது எனக்கு வருத்தமாக உள்ளது. இருப்பினும், அந்த பாடலை எனது வேறு எதாவது ஒரு படத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன். எல்லாம் விதமான படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது தான் என் என்ணம். என்னை ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் அடைக்காதீர்கள், எந்த வேடமாக இருந்தாலும், எந்த ஜானராக இருந்தாலும் என்னிடம் எடுத்து வரலாம். தற்போது கேங்க்ஸ்டார் படம் ஒன்றில் நடித்திருக்கிறேன், அந்த படம் வெளியானால் அப்போது தெரியும். அதேபோல், ‘வண்டி’ படமும் எனது சினிமா கேரியரில் முக்கியமான படமாக இருக்கோம்.” என்றார்.
தயாரிப்பாளர் ஹஷீர் பேசும் போது, “தமிழ்நாடு எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் கலாச்சாரமும் ரொம்ப பிடிக்கும். அதை ஒட்டி ஒரு படம் பண்ணனும், ரொம்ப யதார்த்தமாக, ரியலாக எடுக்கணும்னு ஆசைப்பட்டோம். இந்த வண்டி படத்தில் நிறைய இடங்களில் பல கேமராக்கள் வைத்து, மறைத்து வைத்தெல்லாம் எடுத்திருக்கிறோம். இந்த வகையில் தமிழில் முதல் படமாக இருக்கும் என்று நினைக்கிறேன், தொடர்ந்து நிறைய தமிழ் படங்கள் தயாரிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.” என்றார்.
இயக்குநர் ரஜீஷ் பாலா பேசும் போது, “புது இயக்குநருக்கு தயாரிப்பாளர் கிடைப்பது ரொம்ப கஷ்டம். அப்படி கிடைத்த பின்னரும், இந்த படம் தயாரிப்பில் நிறைய பிரச்சினைகளை சந்தித்தது. ஒரு நல்ல தயாரிப்பாளர் இருந்தால் தான் நல்ல படம் வரும், அப்படி ஹஷீர் எனக்கு ஒரு நல்ல தயாரிப்பாளராக அமைந்தார். விதார்த் கேமராவுக்கு முன்னால் தான் நடிப்பார், மற்றபடி மிகவும் நல்ல மனிதர். இந்த படம் 70 நாட்கள் படப்பிடிப்பில் இருந்தது, 55 நாட்கள் இரவு பகலாக படப்பிடிப்பு நடந்தது. மொத்த குழுவின் கடின உழைப்பினால் தான் இது சாத்தியமானது.” என்றார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...