தியேட்டருக்குள் ரசிகர்களை வர வைக்கும் நடிகர்களில் ஒருவராக திகழும் இந்த நடிகர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தாலும், தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பதோடு இயல்பாக நடிக்க கூடிய நடிகர் என்றும், கதை தேர்வில் கட்டிக்காரர் என்றும் பெயர் எடுத்திருக்கிறார்.
படங்களில் மட்டும் இன்றி நிஜத்திலும் அனைவரிடமும் சகஜமாக பழககூடிய இந்த நடிகருக்கு பெருகி வரும் ரசிகர்கள் கூட்டத்தை வைத்து, இவரை தூக்கிவிட்ட இயக்குநர் ஒருவர் இவருக்கு மக்களின் சொத்தாக கருதி பட்டம் ஒன்றையும் வழங்கினார்.
மேலும், தான் நடித்த படங்களிலேயே மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படத்தை சொந்தமாக அவரே தயாரிக்கவும் செய்தார். இப்படி சினிமாவில் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுக் கொண்டிருக்கும் இந்த நடிகர் குறித்து தற்போது வெளியாகியுள்ள தகவல் கோலிவுட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நடிகர் எந்த நேரமும் மது, மாது என்றே இருக்கிறாராம். படப்பிடிப்பு முடிந்ததும் பாட்டிலை திறப்பவர், சில ரவுண்ட் உள்ளே போனதும் அடுத்தக் கட்டத்திற்கு சென்றுவிடுகிறாராம். எப்போதாவது ஒரு நாள் என்றால், பரவாயில்லை, தினமும் இதை பொழப்பாகவே வைத்திருக்கிறாராம். மேலும், இளம் நடிகை ஒருவரின் வீட்டுக்கு அவரே நேரடியாக அவ்வபோது விசிட்டும் செய்து வருகிறாராம்.
தமிழ் பேசும் சென்னையை சேர்ந்த அந்த நடிகை ஒரு சில படங்களில் நடித்து வந்தாலும், பெரிய அளவில் ஹீரோயினாக சாதிக்க முடியவில்லை. இருந்தாலும் அவருக்கு சரியான வாய்ப்பு தருவதாக அவரை தனது வலையில் சிக்க வைத்திருக்கும் நடிகர் அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வருகிறாராம்.
இந்த நடிகர் படப்பிடிப்பின் போதே போதையில் தான் இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு தகவல் ஒன்று கசிய, தற்போது மதுவுடம், மாதுக்கள் மீதும் மனுஷன் தீராத மோகத்தோடு சுற்றுவதாக கோடம்பாக்க வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...