’உள்குத்து’, ‘அண்ணனுக்கு ஜே’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து தினேஷ் நடித்து வரும் படம் ‘களவாணி மாப்பிள்ளை’. இதில் தினேஷுக்கு ஜோடியாக அதிதி மேனன் நடிக்கிறார். நடிகை தேவயாணி தினேஷுக்கு மாமியாராக நடிக்க, ஆனந்தராஜ், நான் கடவுள் ராஜேந்திரன், முனிஷ்காந்த், சாம்ஸ் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
‘பெரிய கவுண்டர் பொண்ணு’, ’நாடோடி மன்னன்’ உள்ளிட்ட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த ராஜபுஷ்பா பிக்சர்ஸ் நிறுவனம் 17 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிக்கும் இப்படத்தை காந்தி மணிவாசகம் இயக்குகிறார்.
சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு என்.ஆர்.ரகுநந்தன் இசையமைக்க, மோகன்ராஜ், ஏக்நாத் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகஷ்குமார், இயக்குநர் ஷக்தி சிதம்பரம், விநியோகஸ்தர் சங்க தலைவர் அருள்பதி, தயாரிப்பாளர் கதிரேசன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் திரையிடப்பட்ட பாடல்கள் மற்றும் டிரைலரை பார்த்தாலே படம் குடும்ப பின்னணி உருவான காமெடிப் படம் என்று தெரிகிறது. நிச்சயம் இதுபோன்ற படங்கள் சமீபத்தில் பெரிய வெற்றிப் பெற்று வருகிறது. அந்த வரிசையில் ‘களவாணி மாப்பிள்ளை’ படமும் மிகப்பெரிய வெற்றி பெறும், என்று விருந்தினர்கள் வாழ்த்தினார்கள்.
ஜி.வி.பிரகாஷ்குமார் பேசுகையில், “இன்று ஏற்கனவே ஒரு இசை நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டேன். இருந்தாலும், இரண்டாவதாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க இசையமைப்பாலர் ரகுநந்தன் தான் காரணம், என்னுடன் சுமார் 50 படங்களில் அவர் உதவி இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். படத்தின் ஹீரோ தினேஷ் ரொம்பவே பிராமிஷிங்கான ஹீரோ. அவருடன் விசாரணை படத்தில் பணியாற்றியிருக்கிறேன். அவர் நடிக்கும் படம் அனைத்தும் நல்ல படங்களாகவே இருக்கின்றது. அந்த வரிசையில் ‘களவாணி மாப்பிள்ளை’ படமும் வெற்றிப் படமாக அமையும்.” என்றார்.
இயக்குநர் காந்தி மணிவாசகம் பேசும் போது, “என் தந்தை சாதாரண ஒரு விஷயத்தை அதிகப்படியான காமெடி மூலம் சொல்வார். அப்படி அவர் இயக்கிய படங்களும் பெரிய வெற்றி பெற்றது. அந்த பார்முலாவை தான் நான் இதில் பாலோ செய்திருக்கிறேன்.
இந்த படத்தில் ஹீரோவாக நடித்த தினேஷ் உள்ளிட்ட முழு படக்குழுவும் எனக்கு பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். பொள்ளாச்சியில் 45 நாட்கள் அனைவரையும் ஒரு ரிசார்ட்டில் தங்க வைத்து படப்பிடிப்பு நடத்தினேன். கூவாத்தூரி ரிசாட்டில் அடைக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் போல தான் அனைவரும் இருந்தார்கள். ஆனால், ஒருவர் கூட எந்தவித எக்ஸ்கியூஸும் கேட்காமல் எனக்கு படத்தை முடித்துக்கொடுத்தார்கள்.
45 நாட்கள் தினேஷ் என்னுடனே இருந்தார். ஒரு நாளாவது, வீட்டுக்கு போய்ட்டு வந்துட்றேன், எல்ல டென்ஷானது என்று எந்தவிதத்திலும் எனக்கு அவர் நெருக்கடி கொடுக்கவில்லை. அதனால் தான் இந்த படத்தை என்னால் சிறப்பாக எடுக்க முடிந்தது.
ரகுநந்தன் சார் நல்ல மெட்டுக்களை ஒலித்து வைத்திருப்பார். நாம் தான் அதை கண்டுபிடித்து எடுக்க வேண்டும், அப்படி தான் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தையும் அவர் சிறப்பாக கொடுத்திருக்கிறார். படமும் பாடல்கள் போல ஹிட்டாகும்.” என்றார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...