தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களில் நல்லப் படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று வருவதால், திரையுலகினர் மகிழ்ச்சியில் உள்ளனர். அதிலும், ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்திற்கு கிடைத்த வெற்றியை அப்படக்குழுவினர் மட்டும் இன்றி, ஒட்டு மொத்த தமிழ் சினிமாவே கொண்டாடி வருகிறது.
இப்படி ஒரு படத்தின் வெற்றியை கொண்டாடும் கோலிவுட் மறுபக்கம், மற்றொரு படத்தின் வெற்றிக்கு கண்டனம் தெரிவித்து வருவதோடு, அந்த படத்தை தயாரித்தவர், இயக்கியவர் என அனைவரையும் சென்ற இடமெல்லாம் செருப்பால் அடிக்காத குறையாக கடுமையாக விமர்சித்தும் வருகிறார்கள்.
அதே படம் தான், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் வெளியான ஹர..ஹர..., முரட்டு குத்து போன்ற படங்கள் பெரிய வெற்றிப் பெற்றாலும், அந்த படங்களுக்கு சினிமாக்காரர்கள் பலரே எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் நின்றுவிடாமல், தற்போது எதாவது திரைப்பட விழாக்களில், அந்த படங்களை கடுமையாக விமர்சிப்பதோடு, அப்பட தயாரிப்பாளரையும் இயக்குநரையும் பெயர் குறிப்பிடாமல் கண்டபடி வெளுத்து வாங்குகிறார்கள்.
இப்போ மேட்டர் என்னவென்றால், இப்படி பெரிய வெற்றிப் பெற்றாலும், பலரது எதிர்ப்புக்கு ஆளாவதால் அதுபோன்ற படங்களில் நடிக்க நடிகர்கள் தயங்குகிறார்கள். ஏன், அந்த இரண்டு A படங்களில் நடித்த நடிகரே, தற்போது அந்த இயக்குநரை பார்த்து தலதெறிக்க ஓடுகிறாராம்.
இந்த நிலையில், வெற்றிப் பெறும் இதுபோன்ற A படங்களில் நடிக்க தான் ரெடி, என்று நடிகர் விதார்த் தெரிவித்துள்ளார்.
கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் விதார்த், ‘வண்டி’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். இருசக்கர வாகனத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்ட சில இயக்குநர்கள் விதார்த்திடம் கதை சொல்ல முயன்று முடியாமல் போனது குறித்து பேசினார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய விதார்த், நான் அனைவரிடமும் கதை கேட்கிறேன், அதில் சில கதைகள் என்னால் கேட்க முடியாமல் போய்விட்டது. அதை நினைத்து நான் வருத்தமும் பட்டிருக்கிறேன். என்று கூறியவர், தன்னிடம் கதை சொல்ல முயன்ற இயக்குநர்களின் அடுத்தப் படங்களில் நடிக்க ரெடி என்று கூறியதோடு, அதே மேடையில் இருந்த ‘த்ரிஷா இல்லனா நயந்தாரா’ இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் படத்திலும் நடிக்க நான் ரெடி, என்று கூறினார்.
விதார் அப்படி கூறியதும், மேடையில் இருந்தவர்கள் சிரிக்க, “ஆமாங்க...எல்லா வகையான படங்களிலும் நடிக்கனும். விதார்த் இப்படிப் பட்ட படங்களில் தான் நடிப்பார் என்று முடிவு செய்யாதிங்க, இது போன்ற படங்களிலும் நான் நடிக்க ரெடி தாங்க.” என்று கூறினார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...