பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சி முடியும் தருவாயில் உள்ள நிலையில், நிகழ்ச்சியில் பரபரப்பை கூட்டுவதற்காக பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளர்கள் சிலரை, களத்தில் இறக்கியுள்ளார்கள். இதில் சினேகன், வையாபுரி, காயத்ரி, சுஜா வாருணி ஆகியோர் தற்போது பிக் பாஸ் வீட்டிள் நுழைந்திருக்கிறார்கள்.
தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் இரண்டாவது சீசனில் ரொம்ப அமைதியாக இருப்பது போல பலரை வெளியேற்றிய மும்தாஜ் தான், சினேகன் தலைமையிலான பிக் பாஸ் போட்டியாளர்களின் டார்க்கெட்டாக இருக்கிறது.
இன்று ஒளிபரப்பாக கூடிய பிக் பாஸ் எப்பிசோட்டில் மும்தாஜ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது தயிர் கேட்கிறார். ஆனால், அவருக்கு அதை கொடுக்காமல் அங்கு இருக்கும் ஒட்டு மொத்த தயிரையும் வையாபுரி எடுத்து ஒரு இடத்தில் வைத்துவிடுவதோடு, சினேகன், காயத்ரி மற்றும் சுஜா ஆகியோர், “இங்கே அனைவரும் சமம், எல்லோரையும் ஒரே மாதிரி நடத்த வேண்டும்” என்று கூறுகிறார்கள்.
மேலும், சினேகன் கேமராவை பார்த்து, “மும்தாஜ் மேடமை குறி வைத்து இதை நாங்கள் செய்யவில்லை. இங்கு அனைவரும் சமம் என்பதை நிரூபிக்க தான் இதை செய்கிறோம். அட்லீஸ்ட் நாங்கள் இருக்கும் இந்த ஒரு வாரத்திலாவது இதனை இங்கு கடைப்பிடிப்போம், அதற்கு உங்களது ஒத்துழைப்பு தேவை” என்று கூறுகிறார்.
மும்தாஜோ, “சரி விடுங்க. எனக்கு உடம்பு சரியில்லை என்றால், பிக் பாஸ் தானே பொறுப்பு, நான் போட்டியில் இருந்து வெளியே போய்விடுவேன்.” என்று கூற, தற்போது பிக் பாஸ் சீசன் 2 போட்டியாளர்கள் ஒன்றாக் கூடி நின்று பேச செய்கிறார்.
இப்படி பரபரப்பாக ஒளிபரப்பாக உள்ள இன்றைய நாள் எப்பிசோட் மட்டும் இன்றி, சினேகன், காயத்ரி, சுஜா, வையாபுரி ஆகியோர் இருக்கும் இந்த ஒரு வாரமும், தினம் தினம் பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு நிச்சயம் என்பது தெரிகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...