விஜய் முதல் முறையாக மூன்று வேடங்களில் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. படத்தில் இடம்பெற்ற ஜி.எஸ்.டி குறித்தான வசனங்களால் பெரும் சர்ச்சை ஏற்பட்டாலும், இந்திய அளவில் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்ததோடு, வெளிநாடுகளிலும் வசூல் ரீதியாக படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100 வது தயாரிப்பாக வெளியான ‘மெர்சல்’ வசூல் ரீதியாக பல சாதனைகளை புரிந்ததோடு, படத்தின் விளம்பரம், சிறப்பு காட்சி திறையிடல், சமூக வலைதளங்களில் டிரெண்ட்டானது என ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியது.
படம் ரிலிஸுக்கு முன்பும், ரிலிஸான பிறகும் தொடர்ந்த சாதனை தற்போது தொடர்ந்துக் கொண்டு இருப்பதால், ’மெர்சல்’ விஜய் ரசிகர்களை கொண்டாட்ட மூடிலேயே வைத்திருக்கிறது.
இதற்கிடையே, சீன நாட்டில் வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படம் என்ற பெருமையையும், சாதனையையும் ‘மெர்சல்’ படைக்கப் போகிறது என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் என்றாலும், அங்கு 10 ஆயிரம் திரையரங்குகளில் வெளியாகி மேலும் ஒரு சாதனையை மெர்சல் படைக்க இருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
சுமார் 40 ஆயிரம் திரையரங்கங்கள் கொண்ட சீனாவில் ஹாலிவுட் படங்கள் தான் வெளியாகி கல்லாக்கட்டி வந்த நிலையில், தற்போது பாலிவுட் படங்கள் பல அங்கு வெளியாகி வசூலை வாரிகுவித்து வருகிறது. இதை தொடர்ந்து தமிழ் சினிமாவும் சீனாவில் கால்பதிக்க தொடங்கியிருக்கிறது. இதன் முதல் முயற்சி தான் ‘மெர்சல்’ ரிலீஸ்.
டங்கல், சீக்கரட் சூப்பர் ஸ்டார்ஸ் போன்ற பாலிவுட் படங்களை சீனாவில் வெளியிட்ட நிறுவனம் தான் ‘மெர்சல்’ படத்தையும் வெளியிடப் போகிறது. இந்நிறுவனத்துடன் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தற்போது ‘மெர்சல்’ படத்தை சீன மொழியில் டப் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், டிசம்பர் 6 ஆம் தேதி படத்தை வெளியிட இந்நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...