90 களில் முன்னணி இளம் ஹீரோவாக வலம் வந்த பிரஷாந்த், மணிரத்னம், பாலுமகேந்திரா, ஆர்.கே.செல்வமணி என்று பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்ததோடு, ‘ஜூன்ஸ்’, ‘கண்னேதிரே தோன்றினாள்’ என்று தொடர் வெற்றிப் படங்களையும் கொடுத்து வந்தார்.
இதற்கிடையே, பிரஷாந்தின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில பிரச்சினைகளால் அவரது சினிமா வாழ்க்கையும் பாதிப்படைந்தது. பர்சனல் வாழ்க்கையில் ஏற்பட்ட சறுக்கல்களால் சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கியிருந்தவர், பிறகு நடித்த படங்களும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறாததால், முன்னணி ஹீரோவாக இருந்த பிரஷாந்த், தற்போது ஓய்வு பெற்ற ஹீரோக்களின் வரிசையில் தள்ளப்பட்டுள்ளார்.
இருப்பினும், அவரை எப்படியாவது மீண்டும் கோலிவுட்டின் முக்கிய நடிகர்களின் வரிசையில் நிறுத்த வேண்டும் என்பதற்காக அவரது தந்தையும் பிரபல நடிகருமான தியாகராஜன், தொடர்ந்து தனது சொந்த தயாரிப்பில் பிரஷாந்தை நடிக்க வைத்து வருகிறார். அந்த வகையில், தியாகராஜன் பிரஷாந்தை வைத்து ‘ஜானி’ என்ற படத்தை தயாரித்திருக்கிறார். விறுவிறுப்பான ஆக்ஷன் த்ரில்லட் படமாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், இப்படி ஹீரோவாக தான் நடிப்பேன், என்று இருந்தால், அப்பாவின் தயாரிப்பை தவிர வேறு யாருடைய படத்திலும் நடிக்க முடியாது என்பதை உணர்ந்த பிரஷாந்த், ரூட்டை சற்று மாற்றியிருக்கிறார். ஆம், பிரஷாந்த் தற்போது வில்லனாக களம் இறங்க முடிவு செய்துவிட்டார்.
ராம் சரண் நடிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான தெலுங்குப் படத்தில் பிரஷாந்த் வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் பாலிவுட் நடிகர் விவேக் ஒபராயும் நடிக்கிறாராம். கியாரா அத்வானி ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...