பவர் ஸ்டார், கோல்ட் ஸ்டார், வின் ஸ்டார், அனிமல் ஸ்டார் என்று பலவிதமான ஸ்டார்களின் எண்ட்ரி ஒருபக்கம் இருக்க, அவர்கள் கொடுக்கும் அலப்பரையால் கோடம்பாக்கத்திற்கே நெஞ்சுவலி ஏற்பட்டுவிடுகிறது. அப்படிப்பட்ட ஸ்டார்கள் வரிசையில் புதிதாக எண்ட்ரியாகியிருப்பவர் தான் இந்த ‘பப்ளிக் ஸ்டார்’ என்றாலும், மற்ற ஸ்டார்கள் போல அலப்பறை செய்யாமல் அடக்கி வாசிப்பவரை சந்தித்து பேசினோம்.
இந்த பட்டம் யாராவது கொடுத்தாங்களா அல்லது நீங்களே வச்சிக்கிட்டிங்களா? என்று கேட்டதற்கு, பட்டப் பெயர் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற விருப்பமெல்லாம் எனக்கில்ல, துரை சுதாகர் என்ற என் பெயரை சினிமாவுக்காக மாற்ற வேண்டும் என்று சொன்னாங்க. ஆனால் அதில் எனக்கு உடன்பாடில்லை என்பதால், என் பெயருடன் பப்ளிக் ஸ்டாரை சேர்த்துட்டாங்க, என்றவரிடம், சினிமா ஆர்வம் எப்படி வந்தது? என்று கேட்டதற்கு, தஞ்சாவூர் தான் என் சொந்த ஊர், சினிமாத் துறையில் உள்ள பலருக்கு நான் பல உதவிகளை செய்துக்கொடுத்திருக்கிறேன், அப்போது என்னை சந்திக்க வருபவர்கள் சிலர், என்னை நடிக்க அழைத்தார்காள். சரி, நாமும் நடித்து தான் பார்ப்போமே என்று சாதாரணமாகத் தான் நடிக்க வந்தேன். ஆனால், இப்போது நான்கு படங்கள் நடித்து முடித்துவிட்டேன். இப்போது நடிப்பு மீது அதிகமான ஈடுபாடு ஏற்பட்டிருக்கிறது. எனது முதல் படமாக ‘தப்பாட்டம்’ ரிலிஸாகியிருக்கிறது. இதையடுத்து ஒவ்வொரு படமாக வெளியாகும், என்றவரிடம், அஜித்கு போட்டியாக வந்திருக்கீங்களே, என்றதற்கு, அஜித் சாரோட தீவிர ரசிகன் நான், அவருடன் போட்டி போடும் தகுதி எனக்கு இல்லை, அவர் படத்துடன் எனது படம் ரிலிஸாகிறது என்ற திருப்தி அவ்வளவு தான்.
தப்பாட்டம் படத்தில் தப்பு அடிப்பவர் வேடத்தில் நடித்திருக்கிறேன். ஒரு கதாபாத்திரமாக மாறுவது என்பது கஷ்ட்டமாக இருந்தது. ஆனால்ல், இரண்டு நாட்களுக்கு பிறகு எல்லாம் சரியாகிவிட்டது. முதல் படம் என்பதால் சிறு சிறு தவறுகள் செய்திருப்பேன். ஆனால், அடுத்தடுத்து வரும் எனது படங்களில் தவறுகளை திருத்திக்கொண்டு நல்ல நடிகர் என்ற பெயர் வாங்குவேன். எந்த விஷயத்தையும் பார்த்துவிட்டு முடிவு செய்துவிடக் கூடாது, என்னவென்று தீர விசாரித்துவிட்டு தான் முடிவுக்கு வர வேண்டும், என்ற மெசஜ் தான் தப்பாட்டம் படத்தின் கதை. கிராமத்து பின்னணியில் இந்த மெசஜை சொல்லியிருக்கிறோம்.
தஞ்சாவூர் சொந்த ஊர் என்று சொல்கிறீர்கள் அரசியலில் ஆர்வம் இருக்கிறதா, என்றதற்கு, அதெல்லாம் எதுவும் இல்லை. பலருக்கு என்னால் முடிந்த உதவிகளை செய்திருக்கிறேன், செய்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அவற்றை விளம்பரப் படுத்தியதில்லை. ஆரம்பத்தில் சினிமாவை சாதாரணமாக நினைத்தாலும், இப்போது சினிமாவை ரொம்ப விரும்ப ஆரம்பித்துவிட்டேன், எனக்கு ஏற்ற கதைகளில் நடித்து பப்ளிக்கிடம் நல்ல நடிகன் என்ற பெயர் வாங்க வேண்டும் என்பது தான் எனது தற்போதைய எண்ணம், என்றவரிடம் படம் ரிலிஸின் போது எந்தவிதமான அலப்பறை செய்யாமல் சைலண்டாக இருக்கீங்களே என்றதற்கு, ‘பப்ளிக் ஸ்டார்’ என்ற பட்டத்தை நம்ம நட்பு வட்டாரங்கள் கொடுத்தாலும், நம்முலுடைய குணமே சைலண்டு தான், நம்ம வேலய கரெக்டா செய்தாலே போதும், எதற்கு வீன் ஆர்பாட்டம், என்று அடக்காமாக கூறுகிறார் பப்ளிக் ஸ்டார் துரை சுதாகார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...