பிரபல திரைப்பட இயக்குநர் செந்தில்நாதன், கடன் தொல்லை காரணமாக காஞ்சிபுரத்தில் கோவில் ஒன்றில் பிச்சை எடுத்து வருவதாகவும், அவரை சில தயாரிப்பாளர்கள் நண்பர்கள் தொடர்புகொண்ட போது, அவர் தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருப்பதாகவும், அவரை தேடி தயாரிப்பாளர்கள் சிலர் காஞ்சிபுரம் விரைந்துள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும், இது குறித்த செய்தியை நம் தளத்திலும் வெளியிட்டிருந்தோம். மேலும் பல டிவி மற்றும் இணையதள ஊடகங்களிலும் இந்த செய்தி நேற்று காட்டு தீயாக பரவியது.
இந்த நிலையில், இந்த செய்தியை மறுத்திருக்கும் இயக்குநர் செந்தில்நாதன், இந்த செய்தியால் தானும், தனது குடும்பத்தாறும் மன அமைதியற்று இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து செந்தில்நாதன், மக்கள் தொடர்பாளர் ஒருவர் மூலம் கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என்னைப் பற்றி சில தவறான தகவல்கள் வந்து கொண்டு இருக்கிறது. அதற்கு பதில் சொல்கிறேன்.
இம்மாதம் 7 ஆம் தேதி, ஒரு தமிழ் செய்திச் சேனலில், எண்ணைப் பற்றி யோசிக்கவே முடியாத, சில தகவல்கள் சொல்லப்பட்டது.
நான் பிஸியாக, வருடத்துக்கு பத்து படங்கள் இயக்கிய போது கூட, என் சம்மந்தமான ஒரு சிறிய கிசுகிசுவை கூட, செல்போன் இல்லாத காலகட்டத்தில் எனது வீட்டு போன் நம்பருக்கு, போன் செய்து கேட்பார்கள். இபோது அந்த நாகரீகம் வளர்ந்து வரும் சமூதாயத்திடம் இல்லை என்று மூத்த பத்திரிகையாலர் சொன்னார்.
எது எப்படி இருந்தாலும் உங்கள் செய்தியால், என் குடும்பம், உறவினர்கள், நல விரும்பிகள், சினிமா குடும்பத்தார் அனைவரும் மிகவும் மன அமைதியற்று இருக்கிறார்கள். இந்த மன உளைச்சலை ஊடகம், செய்தித்தாள்கள் மாற்ற முடியுமா?
எதிர்காலத்தில் என் எதிரிக்குக் கூட இப்படி செய்ய வேண்டாம் என்று மிக வருத்தத்துடன் கேடுக் கொள்கிறேன்.
எனது திரைப்படம் ‘தடா’ வெளியீட்டு விஷயமாக, தயாரிப்பாளர் சங்கத்தின் நாளைய தலைமுறையின் தலைவர் விஷால் தலைமையில், செயலாளர் கதிரேசன் மற்றும் துரைராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்கள். கூடிய விரைவில் விஷால் தலைமையில் எனது திரைப்படம் ‘தடா’ வெளிவரும்.” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...