ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்று வருவதால், இயக்குநர்கள் ஹீரோயினை மையமாக வைத்து கதை எழுத தொடங்கியுள்ளார்கள். இதன் காரணமாக திருமணத்திற்கு பிறகும் சில நடிகைகள் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார்கள்.
திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ஜோதிகா, ‘36 வயதினிலே’ படத்தின் மூலம் ரீஎண்ட்ரியானார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது மணிரத்னத்தின் ‘செக்கசிவந்த வானம்’ படத்தில் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக நடித்திருக்கும் ஜோதிகா, ராதா மோகன் இயக்கத்தில் ‘காற்றின் மொழி’ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ‘செக்கச்சிவந்த வானம்’ படம் இம்மாதம் வெளியாக உள்ள நிலையில், ‘காற்றின் மொழி’ படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது.
இதற்கிடையே, ஜோதிகா அடுத்ததாக அறிமுக இயக்குநர் ராஜ் என்பவரது இயக்கத்தில் நடிக்க உள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் பிற நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதே சமயம், படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க இருக்கும் படத்தில் ஜோதிகாவை நடிக்க வைக்க இயக்குநர் வெற்றிமாறன் முயற்சித்திருக்கிறார். திருநெல்வேலி பின்னணியில் வெற்றி மாறன் இயக்க இருக்கும் இப்படத்தில், ஜோதிகா ‘நாச்சியார்’ படத்தில் நடித்தது போன்ற ஒரு வலுவான கதாபாத்திரம் இருக்கிறதாம். அதில் ஜோதிகாவையே நடிக்க வைக்கலாம், என்று முடிவு செய்த வெற்றி மாறன், அவரை அனுகினாராம். ஆனால், ஜோதிகா தேதி காரணமாக நடிக்க மறுத்துவிட்டாராம்.
வெற்றி மாறனின் படம் முழுவதும் வெளிப்புற லொக்கேஷன்களில் படமாக்கப்பட இருந்ததால், அதற்கான தேதிகள் ஒதுக்கிக்கொடுக்க முடியாத காரணத்தால் ஜோதிகாவால், தனுஷுடன் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...