தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோயின்களின் பட்டியலில் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்த இளம் நடிகை ஒருவர், தற்போது முன்னணி நடிகரின் ஆசை நாயகி ஆகியுள்ளார்.
திரைக்கதை ஜாம்பவான் என்று சொல்லப்படும் இயக்குநரின் படம் மூலம் நாயகியாக அறிமுகமான இந்த தமிழ் பேசும் நடிகை தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தாலும், அப்படங்கள் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும், இரண்டாம் ஹீரோயின் உள்ளிட்ட சில வேடங்களில் நடித்து வந்தவருக்கு சரியான வாய்ப்புகள் அமையாததால், சில படங்களில் ஹீரோயினுக்கு அக்காவாகவும் நடித்தார்.
இதற்கிடையே, சமீபத்தில் வெளியான வஞ்சகர்களை கொண்ட உலகம் படத்தில் சர்ச்சையான வேடத்தில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தார்.
இந்த நிலையில், நடிகை இப்போது முன்னணி நடிகர் ஒருவரின் ஆசை நாயகியாகியிருக்கிறாராம். அவரது படங்களில் நடிகைக்கு முக்கிய வேடம் எதுவும் கொடுக்கப்படவில்லை என்றாலும், தனது வாழ்க்கையில் நடிகர் முக்கிய இடத்தை கொடுத்திருக்கிறாராம். எப்போதும் நடிகையின் மீது தீவிர ஆர்வத்தோடு இருக்கும் அந்த நடிகர், சில நேரங்களில் நேரடியாக நடிகையின் வீட்டுக்கே விசிட் அடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...