கமல்ஹாசன் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 2 இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் பலர் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது ஒரு சிலர் மட்டுமே போட்டியில் இருக்கிறார்கள்.
இதற்கிடையே, போட்டியை விறுவிறுப்படைய செய்வதற்காக பழைய போட்டியாளர்களை பிக் பாஸ் வீட்டுக்குள் பிக் பாஸ் இறக்கியுள்ளார். அவர்களும் தங்களால் முடிந்தவரை சிலபல விஷயங்களை செய்து பரபரப்பை அதிகரிக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், இன்றைய பிக் பாஸ் எப்பிசோட்டில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு நுழைந்தவர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதாவது, தண்ணீரை கீழே சிந்தாமல் சுற்றி வரும் ஒரு போட்டி வைக்க, அதில் வெற்றி பெறுவர்கள் நேரடியாக பைனல் செல்வார்கள் என்று கூறப்படுகிறது. போட்டி ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே விஜயலட்சுமி தண்ணீரை சிந்த, யாஷிகாவும், ஜனனியும் தான் கடைசி வரை போட்டியில் இருந்தனர்.
மேலும், போட்டி முடிந்ததும் ஜனனியை தான் அனைவரும் கட்டிப்பிடிக்கின்றனர். அதனால் அவர் தான் பிக் பாஸ் சீசன் 2-வில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு சென்றவராக இருக்கலாம்.
எது எப்படியோ, இன்றைய எப்பிசோட்டில் நேரடியாக இறுதி சுற்றுக்கு முன்னேறிய அந்த போட்டியாளர் யார்? என்பது தெரிந்துவிடும்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...