சிவகார்த்திகேயன், சமந்தா, சூரி ஆகியோரது நடிப்பில் நேற்று வெளியாகியுள்ள ‘சீமராஜா’ மக்களிடம் பெரும் வெற்றிப் பெற்றிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் மூன்றாவது படமான ‘சீமராஜா’ படம் குறித்து ஊடகங்கள் கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தாலும், ரசிகர்களிடம் படம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக அறிவித்திருக்கும் தயாரிப்பாளர். ஆர்.டி.ராஜா, வசூல் ரீதியாகவும் படம் சாதனை நிகழ்த்தி வருவதாக கூறியுள்ளார்.
இது குறித்து கூறிய ஆர்.டி.ராஜா, “இந்த வெற்றிக்கு காரணமான சிவகார்த்திகேயனின் ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். ஒரு ஜனரஞ்சகமான படத்துக்கு தேவையான அத்தனை அம்சங்களையும் நிறைத்து ஒரு படத்தை தயாரிப்பது என்பது , அனைத்து மக்களையும் சென்று அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான். குடும்பமாக படம் பார்க்கும் ரசிகர்களையும், இளைஞர்களையும் கவர வேண்டும் என்பதே பிரதான நோக்கம். சிவகார்த்திகேயன் நிறைய வித்தியாசமான வேடங்களில் நடிக்க வேண்டும் என்ற நிலையை தாண்டி , அவரது ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு கலகலப்பான படம் தான் சீமராஜா.
முதல் நாளே திரை அரங்குகளுக்கு குடும்பம் குடும்பமாக ரசிகர்கள் வருகிறார்கள் என்று திரை அரங்கு உரிமையாளர்கள் கூறும் போது உள்ளம் பூரிப்பு அடைகிறது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களின் வசூல் சாதனையை இந்த படம் முறியடிக்கும் என்பதில் எந்த வித ஐயம் இல்லை. முதல் நாள் வசூலே 13.5 கோடி என்பது பெருமைக்குரியது, சாதனைக்குரியது. 550 காட்சிகள் திரை இடபட்டு உள்ளன. இந்த எண்ணிக்கை இந்த வார இறுதிக்குள் மேலும் கூடும்.” என்று தெரிவித்துள்ளார்.
அப்படியனால் இப்போதாவது ஆர்.டி.ராஜா கார் வாங்குவாரா?
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...