மதுக்கூர் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பாக சிங்காரவேலன் தற்போது கிருஷ்ணா நடிக்க சத்யசிவா இயக்கத்தில் ’கழுகு 2’ படத்தை மிகப் பிரமாண்டமாக தயாரித்துக் கொண்டிருக்கிறார். விரைவில் வெளிவர உள்ள இப்படத்தைத் தொடர்ந்து அதிக பொருட் செலவில் வித்தியாசமான கதைக் களத்துடன் உருவாக உள்ள ‘வால்டர்’ என்ற படத்தையும் இந்த நிறுவனம் சார்பில் சிங்காரவேலன் தயாரிக்கிறார்.
இந்த படத்தில் அர்ஜுன் விக்ரம் பிரபு ஜாக்கி ஷெராப் ஆகிய மூவரும் மூன்று விதமான கதாநாயகன் வேடம் ஏற்கிறார்கள். கதாநாயகி உட்பட மற்ற நட்சத்திரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ‘அர்ஜுன் ரெட்டி’ புகர் ரதன் இசையமைக்கிறார். கோபிகிருஷ்ணா எடிட்டிங் செய்ய, ஏ.ஆர்.மோகன் கலையை நிர்மாணிக்கிறார். தஸ்தா, ஷெரிப் ஆகியோர் நடனம் அமைக்க, விக்கி சண்டைப்பயிற்சியை கவனிக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி யு.அன்பரசன் இயக்குநராக அறிமுகமாகிறார்.
அதிரடி ஆக்ஷன் படமாக உருவாக உள்ள ‘வால்டர்’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் சென்னையில் துவங்கி, மதுரை, கும்பகோணம், தென்காசி, குற்றாலாம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...