மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் எத்தி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் சிம்புவின் காதலியாக நடித்திருப்பவர் டயானா எரப்பா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இந்த டயானா எரப்பாவுக்கு இது தான் முதல் திரைப்படம் என்றாலும், இவர் மாடலிங் துறையில் இளவரசியாக வலன் வந்தவர் ஆவார்.
கர்நாடகத்தில் உள்ள கூர்க்கில் பிறந்த டயானா எரப்பா, கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியா போட்டியில் முதல் 10 போட்டியாளர்களில் ஒருவராக திகழ்ந்ததோடு, 2012 ஆம் ஆண்டின் உலகின் மிகவும் மதிப்புமிக்க சர்வதேச மாடலிங் போட்டியான ஷாங்காய் எலைட் மாடல் லுக் போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக பங்கேற்றிருக்கிறார்.
கிங்ஃபிஷர் காலெண்டர் 2015 மற்றும் 2017, லாக்மி பேஷன் வீக், அமோசன் பேஷன் வீக், கெளச்சர் வீக் போன்ற புகழ்பெற்ற பேஷன் பத்திரிகைகளில் இடம்பெற்ற நடிகை டயானா, தனது எளிமையான அழகு மற்றும் நளினம் மற்றும் நடையழகு மூலம் அனைவரையும் வெகுவாக கவர்ந்ததோடு, பேஷன் பத்திரிகைகள் உலகில் ஒரு இளவரசியாகவே வலம் வந்தார்.
மேலும், சர்வதேச பேஷன் பத்திரிகைகளான வோக்ம் எல்லி, ஹார்ப்பர்ஸ் பஜார், காஸ்மோபொலிட்டன் மற்றும் ஜி.கியூ போன்றவைகளில் இவரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
தருண் தஹிலியானி, மனிஷ் மல்ஹோத்ரா, அஞ்சு மோடி, சாந்தனு நிக்கில், கவுராவ் குப்தா, சுனீத் வர்மா, அனிதா டோங்ரே, பாயல் சிங்கல், மோனிஷா ஜெய்சிங், லைப் ஸ்டைல், பீமா ஜூவல்லரி மற்றும் ஆஸ்வா ஜூவல்லரி உள்ளிட்ட பல முன்னணி டிசைனர்களின் விளம்பர மாடலாகவும் நடித்துள்ளார்.
இப்படி பிரபலமான மாடலாக இருக்கும் டயானா எரப்பா, ’செக்கச்சிவந்த வானம்’ படத்தின் மூலம் சினிமா நடிகையாக அறிமுகமாகியிருப்பது ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...