பிக் பாஸ் என்ற டிவி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆரவ, நடிகை ஓவியாவின் காதல் விவகாரத்தால் பிரபலமடைந்ததோடு, பிக் பாஸ் டைடிலையும் வென்றார். பிக் பாஸ் போட்டிக்குப் பிறகு சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தியவர், ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்பதிலும் உறுதியாக இருந்தார்.
இதற்காக, சினிமாவில் சில கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்தாலும் அவற்றை நிராகரித்தவர் தற்போது ஹீரோவாகிவிட்டார்.
ஆம், பிக் பாஸ் ஆரவ் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். ‘ராஜபீமா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பஸ்ட் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆரவ், யானை ஒன்றுடன் இருப்பது போன்ற புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து கூறிய ஆரவ், “ஆரம்பத்தில் இருந்தே நாங்கள் மிகச்சரியான படத்தை ரசிகர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தோம். அது நிறைவேறியதில் எனக்கு மகிழ்ச்சி, அதே நேரத்தில் என் தோள்களில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு வந்து சேர்ந்திருக்கிறது/
ராஜாபீமா தலைப்பு மற்றும் போஸ்டர் பார்த்தவர்கள் யானை மற்றும் பாகனுக்கும் இடையேயான உறவை பேசும் இன்னொரு கதை என்று நினைக்கிறார்கள். உண்மை தான், அந்த போஸ்டர்கள் அப்படி ஒரு உணர்வை கொடுப்பது இயல்பு தான். ஆனால், இது மற்ற கதைகளில் இருந்து முற்றிலும் வேறாக இருக்கும். பல்வேறு வியாபார நோக்கங்களுக்காக விலங்குகளை கொல்வது நிறைய இடங்களில் நடந்து வரும் கொடுமையான ஒரு விஷயம். அதை கமெர்சியல் விஷயங்கள் கலந்து சொல்ல இருக்கிறோம்.
பொதுவாக, மனிதன் - விலங்கு பற்றிய கதைகள் கிராமங்கள் அல்லது காடு, மலை பின்னணியில் இருக்கும். ஆனால் இந்த படம் பாலக்காடு, கோயம்புத்தூர் மற்றும் பொள்ளாச்சி போன்ற நகர்ப்புறப் பகுதிகளில் நடைபெறும் கதையாக வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று கூறும் ஆரவ், பாலக்காட்டில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு வந்திருக்கிறார். அடுத்த கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விரைவில் ஆரம்பமாக இருக்கிறது.” என்றார்.
அறிமுக இயக்குநர் நரேஷ் சம்பத் இயக்கும் இப்படத்தை சுரபி பிலிம்ஸ் சார்பில் எஸ்.மோகன் தயாரிக்கிறார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...