சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான ‘சீமராஜா’ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை வெளியான சிவகார்த்திகேயன் படங்களிலேயே ‘சீமராஜா’ மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் வந்தாலும், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு படம் பிடித்திருப்பதாகவும், சென்னை உள்ளிட்ட பல படங்களி ஹவுஸ்புல் காட்சிலாக படம் ஓடிக்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இப்படி ‘சீமராஜா’ குறித்து பாசிட்டிவான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், திரையரங்க உரிமையாளர் ஒருவர் நெகட்டிவான தகவல் ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியடை செய்துள்ளார்.
அதாவது, சிவகார்த்திகேயன் படங்களிலேயே குறைவான ஓபனிங் பெற்ற படம் ‘சீமராஜா’ தான் என்று, சென்னை ரோகினி திரையரங்க உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் வெளியிடப்பட்ட தகவலில், சிவகார்த்திகேயன் படங்களிலேயே குறைந்த ஓபனிங் பெற்ற படம் சீமராஜா தான். விநியோக பிரச்சினையால் படத்தை சில காட்சிகள் திரையிடாமல் போனதும் இதற்கு ஒரு காரணம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Below par opening for #Seemaraja @RohiniSilverScr Lowest so far in #Sivakarthikeyan movies given we didn't screen first few shows.
— Nikilesh Surya (@NikileshSurya) September 16, 2018
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...