பிக் பாஸின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வந்தாலும், முதல் சீசனைப் போல் நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்றே கூறப்படுகிறது. இதனால், நிகழ்ச்சியில் விறுவிறுப்பை கூட்டுவதற்காக முதல் சீசன் போட்டியாளர்கள் சிலரை பிக் பாஸ் இரண்டாம் சீசனில் இறக்கியுள்ளார்.
டைடிலை வென்ற ஆரவ் உள்ளிட்ட பழைய பிக் பாஸ் போட்டியாளர்கள் 6 பேர், இரண்டாம் சீசனில் கலந்துக் கொண்டு தங்களால் முடிந்தவரை சில பல டாஸ்க்குகளை செய்தனர்.
இந்த நிலையில், முதல் சீசனில் ரசிகர்களிடம் அதிகமாக வாங்கிக் கட்டிக்கொண்ட போட்டியாளரான ஜூலிக்கும், இரண்டாம் சீசனின் சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு வந்ததாம். ஆனால், அம்மணி அடாவடியாக மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் போட்டியில் பங்குபெற்ற போதும் சரி, அங்கிருந்து வெளியே வந்தபோதும் சரி, மக்கள் அதிகமாக வறுத்தெடுத்தது இவரை தான் என்பது அனைவரும் அறிந்ததே. சென்ற இடம் எல்லாம், இவரை வெறுப்பேற்றும் வகையில் மக்கள் இவரை கேவலப்படுத்தி அனுப்பினார்கள். இதனால் மக்கள் கூட்டம் இருந்தாலே அந்த பக்கம் செல்வதை தவிர்த்து வந்தார்.
இதையடுத்து, பிக் பாஸ் இரண்டாம் சீசன் தொடங்கியதும் தான் ரசிகர்கள் ஜூலையை மறக்க தொடங்கியுள்ளதோடு, ஜூலியை வறுத்தெடுப்பதையும் மறந்திருக்கிறார்கள். இந்த நேரத்தில் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் தான் சென்றால் மீண்டும் மக்கள் தன் மீது கோபம் கொண்டு மீண்டும் தன்னை வறுத்தெடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று எண்ணிய ஜூலி, பிக் பாஸின் அழைப்பு நிராகரித்துவிட்டாராம்.
மேலும், தற்போது இரண்டு திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதால் பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் தன்னால் வர முடியாது, என்று கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...