தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்த கருணாஸ், சில படங்களில் ஹீரோவாக நடித்ததோடு, திரைப்பட தயாரிப்பிலும் ஈடுபட்டார். தற்போது அதிமுக எம்.எல்.ஏ-வாக இருக்கும் அவர் முக்குலத்தோர் படை என்ற அமைப்பின் கெளரவ தலைவராகவும் இருக்கிறார்.
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூவத்தூர் ரிசாஸ்டில் அடைத்து வைக்கப்பட்ட போது, கருணாஸின் பெயர் பலவிதத்தில் அடிபட்ட நிலையில், கூட்டம் ஒன்றில் கருணாஸ் பேசிய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 16 ஆம் தேதி சென்னை வள்ளூவர்கோட்டத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய நடிகர் கருணாஸ், உயர் போலீஸ் அதிகாரி ஒருவரை கடுமையாக விமர்சித்து பேசியதோடு, பல கீழ்த்தரமான வாழ்த்தைகளையும் பயன்படுத்தியுள்ளார்.
மேலும், “என் ஜாதிக்காரனுங்க மேல கைய வச்சா, உங்க கைய கால உடைப்பேன்” என்று போலீஸையே அவர் மிரட்டிய விதம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பேசிய கருணாஸ், ஐபிஎஸ் அதிகாரி என்றும் இல்லாமல், சின்ன பய வயசு கம்மி, நல்ல ஆளு தமிழ்காரர். நல்லா வரனும்னு நாங்க நினைக்கிறோம். நீ பேட்டையில, கத்தியை காட்டி காசு கேக்குறோம்னு சொல்ற. ஒரு நாளைக்கு சரக்குக்கு ஒரு லட்சம் செலவு பண்றோம். வர்றவன் போறவனுக்கு பிரியாணி ஆக்கி போடுவதற்கு அவ்வளவு செலவு பண்றோம், என்று கூறியுள்ளார்.
மேலும், சரக்கு வாங்கி கொடுக்குறதும் சாப்பாடு போடுறதும் எங்கள் பாரம்பரியம். சாமிக்கே சாராய பாட்டில் வைத்து சாமி கும்பிடுகிறவங்க. நான் இப்போது சொல்கிறேன் எங்க ஆளுங்க மேல கைய உடைக்கிறேன் காலை ஒடிக்கிறேன்னு வேலை வச்சீங்கன்னா உங்க கை காலை நான் உடைப்பேன். உங்களுக்கெல்லாம் போதை ஏத்தினாதான் கொலை செய்ய துணிச்சல் வரும் நாங்க பல்துலக்கும் நேரத்தில் செஞ்சிட்டு போயிட்டே இருப்போம் என்றும் மிரட்டல் விடுத்தார்.
கருணாஸின் இந்த பேச்சை தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாம். இதனால் அலாட்டான கருணாஸ், ஆவேசத்தில் அப்படி பேசிவிட்டேன். தான் எந்த சமுதாயத்தையும் புண்படுத்தும் நோக்கிலும் காயப்படுத்தும் வகையிலும் பேசியிருந்தால் வருந்துகிறேன். நான் எந்த சமுதாயத்திற்கும் எதிரானவன் அல்ல, என்று வருத்தம் தெரிவித்திருக்கிறாராம்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...