டிவி சீரியல் நடிகை நிலானிக்கு பல ஆண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவருக்கு மது பழக்கம் இருப்பதாகவும் கூறியிருக்கும் லலித்குமாரின் அண்ணன், அதற்கான ஆதாரங்களை விரைவில் வெளியிடப் போவதாக தெரிவித்திருக்கிறார்.
நடிகை நிலானி, போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து உதவி இயக்குநர் லலித்குமார் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து லலித்குமார் தற்கொலைக்கு நிலானி தான் காரணம் என்று அவரது குடும்பத்தார் கூறுவதோடு, நிலானி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால், லலித்குமாரின் குடும்பத்தார் கூறும் குற்றச்சாட்டுகளை மறுக்கும் நிலானி, லலித்குமார் பற்றி பல புகார்களை கூறி வருகிறார். லலித்குமார் தன்னையும், தனது பிள்ளைகளையும் டார்ச்சர் செய்ததாக கூறுபவர், அவருக்கு ஆண்மை இல்லாததால் உடலுறவு எதிர்ப்பார்க்காத ஒரு பெண் மனைவியாக வேண்டும் என்பதற்காக தன்னை டார்ச்சர் செய்வதாகவும் தெரிவித்தார்.
ஆனால் நிலானியின் குற்றச்சாட்டை மறுக்கும் லலித்குமார் குடும்பத்தார், நிலானி குறித்து பல திடுக்கும் தகவல்களை அவ்வபோது கூறி வந்த நிலையில், நேற்று நடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில், லலித்குமாரின் அண்ணன் ரகு குமார், தனது தம்பியின் மரணத்திற்கு நிலானி தான் காரணம். தம்பி மீது பொய் புகார் அளித்ததால் தான் அவர் மனம் உடைந்து தற்கொலை செய்துக் கொண்டார். என் தம்பியை நிலானி நம்ப வைத்து ஏமாற்றி விட்டார்.
நிலானிக்கு குடிப்பழக்கம் உள்ளது. மேலும் அவருக்கு பல ஆண்களுடன் தொடர்பு உள்ளது. அது குறித்த ஆதாரங்களை நான் விரைவில் வெளியிடுவேன். அப்பொழுது நிலானி யார் என்று இந்த உலகத்திற்கு உண்மை தெரிய வரும், என்று தெரிவித்துள்ளார்.
ரகு குமார் நிலானி பற்றிய முக்கிய வீடியோ ஆதாரங்களை நேற்று வெளியிடுவதாக கூறியிருந்தார். அந்த வீடியோ வெளியாகி தன் பெயர் கெட்டுவிடுமோ என்ற பயத்தில் தான் நிலானி தற்கொலை செய்ய முயன்றதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...