மாநில கட்சியோ அல்லது தேசிய கட்சியோ, தேர்தல் நெருங்கிவிட்டால் சினிமா பிரபலங்களுக்கு வலை விரிப்பது எப்படி வழக்கமான ஒன்றோ, அதுபோல பல பெரும்புள்ளிகளுக்கும் வலை விரிப்பது வழக்கம் தான். பணத்தையெல்லாம் பெருஷா நினைக்காத சில முக்கிய புள்ளிகளை வளைக்க, தங்களது ஆட்சி அதிகாரித்தை வைத்து ரெய்டு என்ற அஸ்திரத்தினால் அடிபணிய வைப்பது தான் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் டெக்னிக்.
அதிலும், ஒரு சிலர் வருமான வரித்துறை சோதனையின் மூலம் அடிபணிந்து விடுவார்கள், சிலரோ அத்தனை ரெய்டுகளுக்கும் சரியான கணக்கை காட்டி, அஸ்திரத்தை ஏவிய கட்சிகளுக்கு டாடாவும் காட்டுவதுண்டு. அப்படி, ரெய்டு அஸ்திரத்தினால் சாய்க்க முடியாத பெரும்புள்ளிகளை மடக்குவதற்காக, அவர்களது செல்போன் பேச்சை ஒட்டு கேட்டு, அவர்களின் அந்தரங்கங்களை உருவி, அதை வைத்து அடிபணிய வைப்பது தான் பைனல் மூவ்.
இந்த பைனல் மூவை நடத்திய ஒரு கட்சியின் பிடியில் தற்போது தமிழகத்தின் முக்கிய புள்ளி ஒருவர் சிக்கியிருப்பதோடு, முன்னணி நடிகைகள் சிலரும் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முக்கிய புள்ளியை வளைப்பதற்காக அவரது செல்போன், வீட்டு போன் என்று அனைத்தையும் ஒட்டு கேட்க, அந்த பெரும்புள்ளியோ கோலிவுட்டின் பிரபல இளம் நடிகைகள் சிலருடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இந்த மேட்டர் அரசியல் கட்சியின் கையில் கிடைத்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டவர்கள், பெரும் புள்ளியுடன் சேர்த்து அந்த நடிகைகளின் போன்களையும் தொடர்ந்து ஒட்டு கேட்க, நடிகைகள் பல ரூட்டில் பயணிப்பது, அவர்கள் யார் யார், என்று அனைத்து தகவல்களையும் தங்களது கையில் வைத்துக் கொண்டு அந்த நடிகைகளுக்கும் சேர்த்து செக் வைத்திருக்கிறார்களாம்.
தமிழகத்தில் வலுவாக காலூன்ற நினைக்கும் இந்த அரசியல் கட்சியின், அந்தரங்க தகவல் சேகரிப்பு மிஷினில் சிக்கியிருக்கும் அந்த பெரும்புள்ளி, என்ன நடக்குமோ, என்ற கவலையில் இருக்க, மறுபுறம் இதில் சிக்கிய இரண்டு இளம் முன்னணி நடிகைகள், எங்கு சேகரித்த தகவல்கள் வெளியே கசிந்து விபரீதமாகிவிடுமோ, என்று பெரும் அச்சத்தில் இருக்கிறார்களாம்.
இரண்டு நடிகைகளும் தற்போது பல படங்களில் நடித்து முன்னணி நிலையில் உயர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், இப்படி ஒரு விஷயம் வெளியே லீக்கானால் சினிமா வாழ்க்கையே அஸ்த்தமனமாகிவிடுமோ, என்றும் பயப்படுகிறார்களாம்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...