சினிமாவில் நடித்து கோடிகளை சம்பாதிக்கும் நடிகைகள் பலர் உள்ளுக்குள் பல பிரச்சினைகளில் சிக்கியிருக்கிறார்கள். ஆரம்பத்தில் ஆடம்பரமான வாழ்க்கை நடத்தும் இவர்கள், திடீரென்று வறுமையில் வாடுவது வாடிக்கையாகிவிட்டன.
அந்த வகையில், 1960 மற்றும் 70 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த் காஞ்சனா, தற்போது வறுமையில் இருப்பதாகவும், அவர் ரொம்ப கஷ்ட்டப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், இதை மறுத்திருக்கும் காஞ்சனா, தான் தனது தங்கையில் ஆதரவில் வாழ்வதாகவும், அவர் தன்னை நன்றாக கவனித்துக் கொல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
அதே சமயம், தனக்கு திருமணம் செய்து வைப்பதை கூட தனது பெற்றோர் மறந்துவிட்டார்கள், என்று கூறி தன் மனதிற்குள் இருக்கும் சோகத்தை வெளிப்படுத்தியிருக்கும் அவர், தனக்கு “இன்னொரு பிறவி வேண்டாம்” என்று கடவுளிடம் வேண்டுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று 45 ஆண்டுகளாக ஓய்வில்லாமல் நடித்து வந்த காஞ்சனாவின் சொத்துக்களை அவரது உறவினர்கள் பரித்துக்கொண்டதாகவும், அந்த சொத்துக்களை நீதிமன்றம் மூலம் அவர் மீட்டு, அதில் இருந்து சுமார் ரூ.80 கோடி மதிப்பிலான சொத்துக்களை கோவிலுக்கு தானமாக கொடுத்துவிட்டாராம்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...