குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வந்த ஸ்ரீராம், ‘கோலி சோடா’ படத்தில் நான்கு இளைஞர்களில் ஒருவராக நடித்து அனைவரையும் கவர்ந்தார். இதற்கிடையில் சோலோ ஹீரோவாக ‘பைசா’ என்ற படத்தில் அறிமுகமாகிறார். இதில் கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் நாசர், மதுசூதனன், மயில்சாமி, ராஜசிம்மன், செண்ட்ராயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
விஜய் நடித்த ‘தமிழன்’ படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இப்படத்தினை இயக்குகிறார். கான்பிடண்ட் பிலிம் கபே நிறுவனம் சார்பில் கே.கே.ஆர் ஸ்டுடியோஸ், ஆர்.கே.ட்ரீம் வேர்ல்ட் மற்றும் கராத்தே கே.ஆனந்த் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். கே.பி.வேல்முருகன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜெ.வி இசையமைக்கிறார்.
மனித வாழ்க்கையில் பணம் அத்தியாவசம் என்றாலும், அதுவே வாழ்க்கையாகிவிட்டால் நரகம்தான் மிஞ்சும், என்பதை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...