விஷ்ணு விஷால், அமலா பால் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் படம் ‘ராட்சசன்’. ஆக்ஸஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லிபாபு மற்றும் ஸ்கைலார்க் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ‘முண்டாசுப்பட்டி’ பட இயக்குநர் ராம்குமார் இயக்கியிருக்கிறார்.
ஜிப்ரான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இதில் அமலா பால், விஷ்ணு விஷால் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் ஹீரோ விஷ்ணு விஷால் பேசும் போது, “முண்டாசுப்பட்டி படத்தின் போதே, இயக்குநர் ராமிடம் நாம் இன்னொரு படம் பண்ணலாம் என்று கேட்டேன். அவர் கதை எழுதிட்டு இருக்கேன், கொஞ்சம் நேரம் ஆகும் என்றார். பின் அந்த கதை உங்களுக்கு செட் ஆகாது என்றார், எனக்கு ஏமாற்றமாக இருந்தது. பின்னர் ரொம்ப நாள் கழித்து ஒரு நாள் என்னை அழைத்து கதையை சொன்னார், கதையில் ஆக்ஷன் அதிகமாகவே இருந்தது. எனக்கு அவ்வளவு ஆக்ஷன் செட் ஆகாது என்று கூறினேன். பல தடைகளுக்கு பிறகும் இந்த கதை என்னையே தேடி வந்தபோது தான், எனக்கு தான் இந்த கதை போல, என்ற உணர்வு எழுந்தது. கதை ஒரு சில முக்கிய கதாபாத்திரங்களை சுற்றியே நடக்கும். அதில் அமலா பால் கதாபாத்திரமும் ஒன்று. அவர் 25 நாட்களுக்கும் மேல் நைட் ஷூட்டிங்கில் நடித்துக் கொடுத்தார். படத்தின் மீதுள்ள நம்பிக்கையால் ரிலீஸ் நேர பயம் எனக்கு இல்லை. இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும், அப்படி படம் ஓடலனா தயாரிப்பாளருக்கு அடுத்த படம் நான் நடித்துக் கொடுக்கிறேன்.” என்று சவால் விட்டார்.
நடிகை அமலா பால் பேசும் போது, “இந்த படத்தில் நடிக்கும் போதில் இருந்தே, படம் எப்போ ரிலீஸ் ஆகும் என ரிலீஸுக்காக ரொம்ப நாளாகவே காத்திருக்கிறோம். இயக்குநர் ராம் கதை சரியாக சொல்லவில்லை, பின் விஷ்ணு தான் அவர் கொஞ்சம் கூச்ச சுபாவம் உடையவர் என சொல்லி, அவரே கதையை எனக்கு விளக்கினார். கதை ரொம்பவே பிடித்தது. ராம் ரொம்பவே கடின உழைப்பாளி, நேரம் எடுத்து மிகவும் விரிவாக, தெளிவாக படத்தை எடுப்பார். சினிமாவில் எனக்கு அவ்வளவாக நண்பர்கள் கிடையாது, விஷ்ணு இந்த படத்துக்கு பிறகு எனக்கு நல்ல நண்பராகி விட்டார். நடிக்க வருபவர்களுக்கு விஷ்ணு ஒரு இன்ஸ்பிரேஷன். படத்துக்காக அவருடைய உழைப்பு அபரிமிதமானது. ஒட்டுமொத்த படக்குழுவும் படம் சிறப்பாக வருவதற்கு தங்கள் பங்களிப்பை கொடுத்திருக்கிறது. திரில்லர் படம் என்றாலே ஹாலிவுட்டுடன் ஒப்பிடுவார்கள், ஆனால் இது நம்ம ஊரு திரில்லர் படம் என்று சொல்லும் அளவுக்கு நேட்டிவிட்டியுடன் இருக்கும். திரில்லர் படங்களில் இது ஒரு பெஞ்ச்மார்க்காக இருக்கும்.” என்றார்.
தயாரிப்பாளர் டில்லிபாபு பேசும் போது, “நல்ல கதையுள்ள படங்களை எடுக்கும் நோக்கத்தில் தான் ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி இயங்கி வருகிறது. பொதுவாகவே திரில்லர், ஹாரர் படங்களின் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. மரகத நாணயம் இயக்குநர் மூலம் தான் இந்த கதையை நான் கேட்க நேர்ந்தது. விஷ்ணு, அமலாவிடம் கதை சொல்லும் போது கொஞ்சம் பதட்டமாக இருந்த ராம், என்னிடம் கதையை மிகத்தெளிவாக சொன்னார், மிகச்சிறப்பான கதை. இரண்டரை மணி நேரம் மிகவும் சீரியஸான, திரில்லர் படத்தை கொடுத்து ரசிகர்களை சீட்டில் உட்கார வைக்க முடியும் என்பதை ராம் நிரூபித்திருக்கிறார். படத்தின் ரிசல்ட்டை இப்போதே என்னால் உணர முடிகிறது. காசு இருந்தால் யார் வேண்டுமானாலும் படத்தை எடுத்து விடலாம், ஆனால் அதை கொண்டு சேர்ப்பது தான் கஷ்டம். அதிர்ஷ்டவசமாக எங்கள் படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் சார் ரிலீஸ் செய்கிறார். ஆக்சஸ் தொடர்ந்து நல்ல படங்களை எடுப்பதால் உங்களின் அடுத்தடுத்த படங்களையும் நானே ரிலீஸ் செய்கிறேன் என உறுதி அளித்திருக்கிறார். இந்த படத்தின் டீசர், டிரைலர் வந்தவுடன் பல்வேறு பிரபலங்கள் எங்களை பாராட்டினார்கள். அந்த அளவுக்கு படமும் நல்ல தரமாக இருக்கும்.” என்றார்.
இயக்குநர் ராம்குமார் பேசும் போது, “படத்தின் டீசர், டிரைலர் பார்த்து விட்டு எல்லோரும் சொன்ன கமெண்ட்ஸ் பார்த்து படத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்திருக்கிறது. முண்டாசுப்பட்டி படத்துக்கு பிறகு இந்த கதையை கிட்டத்தட்ட 20 தயாரிப்பாளர்கள் மற்றும் 17 ஹீரோக்களிடம் சொல்லி விட்டேன். சீரியஸ் படம் என்ற உடனே அவர்கள் யோசித்து சொல்கிறேன் என சொல்லி விட்டார்கள். ஆனால் டில்லி பாபு சார் தான் என் மீது முழு நம்பிக்கை வைத்து இந்த படத்தை தயாரிக்க முன் வந்தார். விஷ்ணு என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். படத்தை பார்க்கும் போது இந்த குழுவின் உழைப்பை நீங்கள் உணர்வீர்கள். ராதாரவி, நிழல்கள் ரவி சார் ஆகியோரின் குரலுக்காகவே இந்த படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். அமலா பால் ரீ-டேக் வாங்கவே மாட்டார். அவருக்கு காட்சிகள் குறைவு என்றார்கள், ஆனால் அழுத்தமான கதாபத்திரமாக இருக்கும். காளி வெங்கட், ராமதாஸ் இருவருமே நல்ல நடிகர்கள். இந்த படத்தின் வெற்றியில் இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு பாதி பங்கு உண்டு, பின்னணி இசை மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. மனதளவிலும், உடலளவிலும் சோர்ந்து போனாலும் எனக்கு சிறந்த பங்களிப்பையே செய்தார் எடிட்டர் ஷான் லோகேஷ். பிவி சங்கர் ஒளிப்பதிவு மிகவும் பேசப்படும். இந்த படம் வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தார் அருண்ராஜா காமராஜ். திரையரங்கில் போய் பார்க்கும் யாரையும் இந்த படம் ஏமாற்றாது.” என்றார்.
வரும் அக்டோபர் 5 ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...