தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் சில ஹீரோக்கள் முன்னணியில் இருப்பது எப்படி சகஜமான ஒன்றோ, அதுபோல அவர்களைவிட சீனியர்களாக இருக்கும் ஹீரோயின்களுடன் அவர்கள் ஜோடி சேர்ந்து நடிக்க விரும்புவதும் சகஜமான ஒன்று தான்.
அந்த வகையில், தற்போதைய தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி ஹீரோக்களான விஜய் சேதுபதியும், சிவகார்த்திகேயனும் முன்னணி ஹீரோக்களின் பட்டியலில் இடம் பிடித்தாலும், தங்களது படங்களில் ஹீரோயினாக நடிக்கும் நடிகைகள் தேர்விலும் தங்களை முன்னணி ஹீரோக்களாக காட்டிக்கொள்வதில் ரொம்பவே கவனம் செலுத்தி வருகிறார்கள். அதனால் தான் நயந்தாராவுடன் இருவரும் ஜோடி சேர்ந்தவுடன், அடுத்தக் கட்டமான பிற முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வரிசையில், சிவகார்த்திகேயன் சமந்தாவுடன் ஜோடி சேர்ந்த பிறகு, விஜய் சேதுபதி திரிஷாவுடன் ஜோடி சேர்ந்து நடித்த படம் தான் ‘96’.
விஜய் சேதுபதியின் ஆரம்ப வெற்றிப் படமான ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் ஒளிப்பதிவாளரான பிரேம் இயக்குநராக அறிமுகமாகும் இப்படம் முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகியுள்ளது. விஜய் சேதுபதிக்கு முதல் முறையாக திரிஷா ஜோடி சேர்ந்திருப்பது ஒரு புறம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், இவர்கள் இருவருக்கும் இடையிலான காதல் கெமிஸ்ட்ரி எப்படி வேலை செய்திருக்கும் என்பதும் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதற்கு ஏற்றவாறு, இப்படத்தின் துவக்க விழாவில், ”தனக்கு காதல் காட்சிகளில் நடிக்க ரொம்பவே பிடிக்கும், எதிரில் எவ்வளவு பெரிய நடிகையாக இருந்தாலும், காதல் காட்சி என்று வந்துவிட்டால் புகுந்து விளையாடிவிடுவேன்” என்று விஜய் சேதுபதி சொன்னது, இன்னமும் நம் காதில் ஒலித்துகொண்டு தான் இருக்கிறது.
இப்படி இந்த படம் குறித்து பல எதிர்ப்பார்ப்புகள் நம் மனதில் இருக்க, அடுத்த மாதம் 5 ஆம் தேதி படம் வெளியாக உள்ள நிலையில், படத்துவக்க விழாவுக்கு பிறகு, 96 படக்குழுவினர் இன்று, இரண்டாவது முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.
இந்த சந்திப்பில் ஆரம்பத்திலேயே இரண்டு பாடல்கள் மற்றும் சில நிமிட காட்சிகள் திரையிடப்பட, அந்த காட்சிகளே விஜய் சேதுபதி, திரிஷாவை எந்த அளவுக்கு காதலித்திருப்பார் என்பதை நமக்கு புரிய வைத்தது.
இந்த நிலையில், படம் குறித்து படக்குழுவினர் ஒவ்வொருவராக பேச தொடங்கிய போது, படத்தின் கலை இயக்குநர், தான் 12 ம் வகுப்பு படிக்கும் போது ‘மெளனம் பேசியதே’ படம் வெளியானது அப்போதே திரிஷாவைப் பார்த்து, நானும் எனது நண்பர்களும் “எனக்கு தான்...எனக்கு தான்...” என்று சொந்தம் கொண்டாடினோம். ஆனால், இன்று அவங்களோட படத்தில் பணிபுரிந்தது ரொம்பவே சந்தோஷமாக இருக்கிறது.” என்றார்.
இவர் தான் இப்படி என்றால், இசையமைப்பாளர் பேசும் போது கூட, திரிஷாவின் தீவிர ரசிகன் நான், அவரை திரையில் பார்க்கும் போது இசையமைப்பதைக் காட்டிலும், அவரை ரசிப்பதில் தான் ஆர்வமாக இருந்தேன்.” என்றார்.
இப்படி படக்குழுவினர் ஒவ்வொருவரும் பேசும் போது திரிஷா குறித்தே பேசியதால் சற்று கடுப்பான விஜய் சேதுபதி, மைக்கை பிடித்ததும், படக்குழுவினர் ஒவ்வொருவரையும் அவரே அறிமுகப்படுத்தியதோடு, அவர்கள் அனைவரும் தனது நண்பர்கள் தான், அவர்களுடன் தான் பணிபுரியும் நான்காவது படம் இது, என்று கூறி, அவர்களது ஆசைக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, அதன் பிறகு ஒட்டு மொத்த நிகழ்ச்சியையும் தனது பேச்சால், வசப்படுத்திக் கொண்டவர், இறுதியில் திரிஷா என்னை விட சீனியர் நடிகையாக இருந்தாலும், என்னை விட வயதில் சிறியவர் என்பதையும் தெளிவுப்படுத்தினார்.
அதேபோல், திரிஷா பேசும் போது, இந்த படத்தில் நான் திரிஷாவாக நடிக்கவில்லை, சேதுபதியும் அவராக நடிக்கவில்லை, கதைக்கு தேவைப்பட்டதை போல, புதிய நடிகர்களாகவே நடித்தோம், என்றார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...