பிக் பாஸ் முதல் சீசனில் ஒட்டு மொத்த தமிழக மக்களை கவர்ந்த ஓவியா, பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தார். பிக் பாஸ் வீட்டில் அவர் சக போட்டியாளர்களுடன் பேசுவது, சண்டை போடுவது என்று கவர்ந்தவர், ஒரு கட்டத்தில் ஆரவ் மீது காதலும் கொண்டார்.
ஓவியா ஆரவை காதலிக்க தொடங்கியதுமே, பிக் போட்டி ஜெட் வேகத்தில் மக்களிடம் பரவ தொடங்கியது. பிறகு சில காரணங்களால் ஒவியா போட்டியில் இருந்து பாதியிலேயே விலகிவிட்டார். இதனால், மக்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர். பிறகு பிக் பாஸ் வீட்டில் இருந்து வந்த ஓவியா, சில பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றதோடு, திரைப்படங்களில் நடிப்பதிலும் தீவிரம் காட்ட தொடங்கினார். மேலும், இப்போது தான் யாரையும் காதலிக்கவில்லை. இதனால் ரொம்பவே நிம்மதியாக இருக்கிறேன், என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஓவியா மீண்டும் ஆரவுடன் நல்ல தொடர்பில் இருப்பதாக கூறியிருக்கிறார். இதனால், அவர் ஆரவை மீண்டும் காதலிகக் தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
நேற்று நடைபெற்ற பிக் பாஸ் சீசன் 2-வின் இறுதிப் போட்டியில் விருந்தினராக பங்கேற்ற ஓவியா பேசும் போது, “நல்லதோ கெட்டதோ... பிக்பாஸில் எனக்கு ஒரு அனுபவம் கிடைத்தது" என கூறினார்.
அதன்பின் பார்வையாளர்களில் ஒருவர் ஓவியாவிடம் "ஆரவ்வுடன் காதல் இருக்கிறதா? தற்போது உங்களுக்குள் இருக்கும் ரிலேஷன்ஷிப் என்ன" என கேட்க, "தற்போது எங்களுக்குள் ஒரு ஹெல்தியான ரிலிஷன்ஷிப் இருக்கிறது.” என்று ஓவியா பதில் அளித்தார்.
ஓவியாவின் இந்த பதிலால், அவர் ஆரவை தற்போது காதலித்து வருவதை தான் இப்படி மறைமுகமாக சொல்கிறார், என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதிக்க தொடங்கியுள்ளார்கள்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...