‘தரமணி’ வெற்றியை தொடர்ந்து ஜெ.எஸ்.கே பிலிம் கார்ப்போரேஷன் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படம் ‘ஹெளரா பிரிட்ஜ்’ திரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை லோஹித் இயக்குகிறார். தரமணியை போல பெண் கதாபாத்திரதை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் பிரியங்கா உபேந்திரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, அவரது மகளாக ஐஸ்வர்யா நடிக்கிறார்.
முழுக்கம் முழுக்க கொல்கத்தாவில் கதை நடப்பது போல திரைக்கதை எழுதப்பட்டுள்ள இப்படம் குறித்து தயாரிப்பாளர் ஜெ.சதீஷ்குமார் கூறுகையில், “ஹெளரா பிரிட்ஜ் உண்மை சம்பவத்தை மையமாக வைத்து பின்னப்பட்டுள்ள திரில்லர் கதை. செப்டம்பர் 4 ஆம் தேதி தொடங்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு மாதம் நடக்க உள்ளது. இக்கதை ஓட்டத்திற்கு கொல்கத்தா நகரம் மிக பொருத்தமான நகராக இருப்பதால் படப்பிடிப்பை அங்கு நடத்த உள்ளோம். இப்படம் எனது தயாரிப்பு நிறுவனத்திற்கு மேலும் மதிப்பை கூட்டும் என உறுதியாக நம்புகிறேன்.” என்றார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...