மக்களிடம் வரவேற்பு பெற்ற டிவி நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் நிகழ்ச்சி முன்னணியில் இருக்கிறது. முதல் சீசன் போல இரண்டாம் சீசன் நிகழ்ச்சி சுவாரஸ்யமாக இல்லை, என்ற குற்றச்சாட்டு இருந்தாலும் பிக் பாஸ் வெற்றிக்கரமாகவே முடிந்திருக்கிறது.
இரண்டு சீசன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன், மூன்றாவது நிகழ்ச்சி ஒளிபரப்பானால் அதை தொகுத்து வழங்குவாரா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் ஏற்பட்ட நிலையில், அவர் மூன்றாவது சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க மாட்டார், என்பதை அவரே இரண்டாம் சீசன் இறுதிப் போட்டியின் போது சூச்சகமாக தெரிவித்தார்.
அதாவது, கிராண்ட் பினாலேவில் பங்கேற்ற கமல்ஹாசன், போட்டியாளர்கள் அமரும் சோபாவில் உட்கார்ந்து, தான் தான் போட்டியாளர் என்றார். உடனே ஜனனி மைக்கை கையில் எடுத்து நீங்க இந்த வாரம் நாமினேட் ஆகியிருக்கிறீர்கள், அதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். இதுவரை தாக்குப்பிடித்துவிட்டேனே என்ற சந்தோஷம் என்று பதில் அளித்த கமல் பார்வையாளர்களை பார்த்து நன்றி என்று கூறி கும்பிட்டார்.
நான் ஏதாவது செய்தால் மன்னித்துவிடுங்கள். வேண்டும் என்றே செய்யவில்லை. செய்யச் சொன்னார்கள் செய்துவிட்டேன் என்று கூறினார் கமல். பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் அதை கமல் உறுதி செய்துவிட்டார். இதை அவர் உறுதி செய்தது முதல் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், பிக் பாஸ் மூன்றாவது சீசனை நடிகர் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவி மூலம் பிரபலமான சிவகார்த்திகேயன், தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோக்களில் ஒருவராக இருந்தாலும், தொடர்ந்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார். அதேபோல், விஜய் டிவியும் சிவகார்த்திகேயன் படங்களை சப்போர்ட் செய்து வருகிறார்கள்.
இதற்கிடையே, கமல்ஹாசனுக்கு பிறகு முக்கியமான நடிகரை வைத்து பிக் பாஸ் சீசன் 3-யை நடத்த திட்டமிட்டிருக்கும் விஜய் டிவி முதலில், சூர்யா, சிவகார்த்திகேயன் ஒருவரில் ஒருவரை வைத்து மூன்றாவது சீசனை நடத்தலாம் என்று ஆலோசித்து வருவதாகவும், இதில் சிவகார்த்திகேயன் தான் ஓகே ஆவார் என்றும் கூறப்படுகிறது.
இது அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், தற்போது கோலிவுட்டில் பரவும் முக்கியமான தகவல்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...