பிரபுதேவா, லட்சுமி மேனன் நடிப்பில் உருவாகி வரும் ‘எங் மங் சங்’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ‘பாகுபலி’ வில்லன் பிரபாகருடன் பிரபு தேவா மோதும் சண்டைக்காட்சி ஒன்றை மிக பிரம்மாண்டமான முறையில் சமீபத்தில் படமாக்கியுள்ளனர்.
இதில், பிரபு தேவா குங்பூ மாஸ்டராக நடிக்க, சண்டைகளை கற்று கொடுக்குக் தொழிலை செய்யும் கூட்டத்தின் தலைவராக ’பாகுபலி’ வில்லன் பிரபாகர் நடிக்கிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெறும் ஆக்ஷன் காட்சி ஒன்றை, சென்னை அருகே உள்ள பொழிச்சலூர் காட்டுப் பகுதியில் கடந்த 7 நாட்களாக படமாக்கியுள்ளனர்.
இந்த சண்டைக்காட்சியில் ஆயிரக்கணக்கான நடிகர் நடிகைகள் பங்கெடுக்க, மிக பிரம்மாண்டமான முறையில் படமாக்கப்பட்டுள்ளது.
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம் சார்பில் கே.எஸ்.சீனிவாசன், கே.எஸ்.சிவராமன் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தில், தங்கர்பச்சான், ஆர்.ஜே.பாலாஜி, சித்திராலட்சுமனன், கும்கி அஸ்வின், காளிவெங்கட், முனீஸ்காந்த், மாரிமுத்து, வித்யா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்க, பிரபுதேவா மற்றும் மு.ரவிகுமார் பாடல்கள் எழுதியுள்ளனர். ஸ்ரீதர், நோபல் ஆகியோர் நடனம் அமைக்க, சில்வ சண்டைக்காட்சிகலை வடிவமைத்திருக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி அர்ஜுன் எம்.எஸ் இயக்குகிறார்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து ரசிகர்களின் கொண்டாட்ட படமாக ‘எங் மங் சங்’ இருக்கும், என்று இயக்குநர் நம்பிக்கை தெரிவித்தார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...