சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘சர்கார்’ படம் வரும் தீபாவளியன்று வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கலாநிதி மாறன், ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்துக்கொண்ட விழாவில், படத்தின் பாடல்களை ரசிகர்கள் மூலமாக வித்தியாசமான முறையில் வெளியிட்டனர். மேலும், படத்தில் இடம்பெறும் பாடல்களை மேடையில் லைவாக இசைக் கலைஞர்கள் பாடியதோடு, பாடலுக்கு நடனமும் ஆடினார்கள்.
நிகழ்ச்சியின் இறுதிக் கட்டமாக விஜய் தற்போது பேசி வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் குறித்து பேசிய விஜய், படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான இசையமைத்திருப்பது, ஆஸ்கார் விருது கிடைத்ததற்கு சமம், என்றார்.
மேலும், ‘மெர்சல்’ படத்தில் கொஞ்சம் அரசியல் வைத்தோம், இதில் அரசியலை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் மெர்சல் காட்டியிருக்கிறார், என்றவர், ’சர்கார்’ படத்தில் நான் முதல்வராக நடிக்கவில்லை. நான் நிஜத்தில் முதல்வர், ஆனால் முதல்வராக நடிக்க மாட்டேன், என்றார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...