தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராகவும் உள்ள நடிகர் விஷாலின் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி - உம்மிடி க்ரிதிஷ் ஆகியோரின் திருமணம் இன்று காலை சென்னையில் நடைபெற்றது.
இதில், தயாரிப்பாளர்கள் கதிரேசன், ஞானவேல் ராஜா, நடிகர்கள் பொன்வண்ணன், ஸ்ரீமன், பாக்யராஜ், விக்ராந்த், ஆர்யா, கார்த்தி, பிளாக் பாண்டி, ஹேமச்சந்திரன், மனோபாலா, இயக்குநர்கள் கே.பாக்யராஜ், மிஷ்கின், விஷ்னுவர்தன், பாண், இயக்குநர் பி.வாசு, நடிகர் ரமணா, நடிகர் சாந்தனு, நடிகர் அர்ஜுனின் மனைவி ஆஷா ராணி அர்ஜுன், ஜெகன், சின்னி ஜெயந்த், சிபி ராஜ், நந்தா, வினய், பசுபதி, நடிகை சங்கீதா, நடிகர் ஜான் விஜய், ஆதவ் கண்ணதாசன், நடிகர் செளந்தரராஜா, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட ஏராளமான பிரமுகர்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
திருமணத்தை தொடர்ந்து இன்று மாலை சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...