ஆபாசப் படங்கள் நடித்து பிரபலமான சன்னி லியோன், தற்போது அதுபோன்ற படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு இந்தி திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், அவரது வாழ்க்யை மையமாக கொண்டு உருவான் வெப் சீரிஸிலும் அவரே நடித்திருந்தார்.
இதற்கிடையே, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் உருவாகும் ‘வீரமாதேவி’ படத்தில் சன்னி லியோன் வீராமாதேவி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பஸ்ட் லுக் போட்டோ ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.
இந்த நிலையில், வரலாற்று சரித்திரப்படமான ‘வீரமாதேவி’ படத்தில் சன்னி லியோன் நடிப்பதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக, கன்னட ரக்சன வேதிகே அமைப்பினர் சன்னி லியோனுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஆபாசமாக நடித்த ஒரு நடிகை எப்படி கலாச்சாரம், பண்பாடு உள்ளிட்டவைகளை கொண்ட வரலாற்று சரித்திரப் படத்தில் நடிக்க முடியும்? என்ற ரீதியில் சன்னி லியோனுக்கு எதிராக அமைப்புகள் பல பொங்கி எழ தொடங்கியுள்ளனர்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...