விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘96’. முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகியுள்ள இப்படத்தை பிரபல ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் இயக்கியுள்ளார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்தகோபால் தயாரித்திருக்கும் இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதியும், திரிஷாவும் முதல் முறையாக ஜோடி சேர்ந்திருப்பதாலும், விஜய் சேதுபதி முதல் முறையாக காதல் திரைப்படத்தில் நடித்திருப்பதாலும் இப்படம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியது. அதற்கு ஏற்றவாறு கடந்த 1 ஆம் தேதியே இப்படத்தினை பத்திரிகையாளர்களுக்கு படக்குழு போட்டுக்காட்டினார்கள். படத்தைப் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாக பாராட்டியதோடு, அன்றில் இருந்து படத்தின் விமர்சனங்களையும் எழுத தொடங்கிவிட்டார்கள்.
பத்திரிகை, தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் சமூக வலைதளங்களில் ‘96’ படம் குறித்து பாசிட்டிவான செய்திகளும், விமர்சனங்களும் தொடர்ந்து வெளியானதால், படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரிக்க தொடங்கியது.
இந்த நிலையில், இன்று வெளியாக இருந்த ‘96’ படத்தின் வெளியீட்டில் திடீரென்று பிரச்சினை ஏற்பட்டதாகவும், பிறகு பேச்சுவார்த்தை மூலம் அந்த பிரச்சினை தீர்க்கப்பட்டு படம் ரிலீஸாகியுள்ளதாக, பிரபல தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘96’ படத்தின் ரிலிஸுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்க தலைவரும், நடிகர் சங்க செயலாளாருமான விஷால் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
96 படத்தின் தயாரிப்பாளர் நந்தகோபால் தான் விஷாலின் ‘கத்திசண்டை’ படத்தை தயாரித்தார். இந்த படம் தொடர்பாக அவருக்கும் விஷாலுக்கும் பண விவகாரத்தில் ஏதோ பிரச்சினை இருக்கிறதாம். இதை காரணம் காட்டி, ‘96’ படத்தின் ரிலிஸுக்கு விஷால் முட்டுக்கட்டை போட்டதாக, தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் விஷாலிடம் விசாரிப்பதற்காக அவரை போனில் தொடர்புகொண்டார். அவரது போன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாகவும், அவர் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் சங்கத்தின் தலைவராக இருக்கும் விஷால், ஒரு படத்தின் ரிலிஸுக்கு இப்படி முட்டுக்கட்டை போடுவது சரியா? பிரச்சினை என்னவாக இருந்தாலும், அதை பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, இப்படி படத்தின் ரிலீஸுக்கு முட்டுக்கட்டையாக இருக்க கூடாது, இது குறித்து விஷால் விளக்கம் அளிக்க வேண்டும், என்றும் ஜே.சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும், ‘96’ படம் ரிலீஸில் பிரச்சினை வந்தபோது, இப்படத்திற்காக குறைவான சம்பளத்தை பெற்றிருந்தாலும், அதில் ரூ.1 கோடியை விட்டுக்கொடுக்க விஜய் சேதுபதி முன்வந்திருப்பதாகவும், ஜே.சதீஷ்குமார் தெரிவித்திருக்கிறார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...