பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கை அழைக்கும் பழக்கம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய சினிமாவில் மட்டும் இன்றி ஹாலிவுட் சினிமாவிலும் அதிகரித்து வரும் நிலையில், அது குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக பேசி வருகிறார்கள். அப்படி பேசும் நடிகைகள், சினிமாவில் மட்டும் அல்ல பல துறைகளிலும் பெண்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் இருக்கின்றது. ஆனால், அதில் அவர்கள் சிக்காமல் தங்களது திறமை மீது மட்டும் நம்பிக்கை வைத்து முன்னேற வேண்டும், என்றும் கூறிவருகிறார்கள்.
அந்த வகையில், தனது திறமை மீது மட்டுமே நம்பிக்கை வைத்த டாப்ஸி, தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக உருவெடுத்திருப்பதோடு, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வெற்றியும் பெற்று வருகிறார்.
தனுஷ் நடித்த ‘ஆடுகளம்’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமான டாப்ஸி, தொடர்ந்து சில தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களில் நடித்தாலும், அவருக்கு சொல்லும்படியான வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. இதையடுத்து இந்தி சினிமாவுக்கு போனவருக்கு சில வாய்ப்புகள் கிடைக்க, அதை சரியாக பயன்படுத்திக் கொண்டவர், தற்போது பாலிவுட்டின் விஜயசாந்தியாக உருவெடுத்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், ”சினிமாவில் எனக்கென்று தனி பாணியை உருவாக்கி நடிக்கிறேன். பல வருடங்களுக்கு பிறகு ரசிகர்கள் என்னை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமானால் மற்றவர்களை பின்பற்றுவதை விட எனக்கென்று புதிய பாணி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து இருக்கிறேன். வீணாக மேக்கப் போடுவது அதற்காக நேரத்தை செலவிடுவது எனக்கு பிடிக்காது.
சினிமாவுக்காக எதையும் செய்ய தயார். கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் என்ன தேவையோ அதை செய்ய தயாராக இருக்கிறேன்.
துப்பாக்கி சுடும் வீரர்கள் பற்றி அனுராக் காஷ்யப் எடுக்கும் உண்மை கதையில் நடிக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்தும் உள்ள படம். அந்த படத்துக்காக துப்பாக்கி சுட கற்று வருகிறேன். இதன் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்குகிறது. ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டால் அதற்கு நூறு சதவீதம் உழைப்பை கொடுக்க வேண்டும். நடிப்பு இயற்கையாக இருக்க வேண்டும். எந்த காரணத்துக்காவும் டூப் நடிகையை வைத்து காட்சிகளை எடுக்க நான் சம்மதிக்க மாட்டேன். நானே எல்லா காட்சிகளிலும் நடிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...