‘தங்க மீன்கள்’ படத்தில் ஸ்டெல்லா டீச்சர் என்ற வேடத்தில் நடித்து பிரபலமடைந்தவர் தான் தற்போது ‘தரமணி’ படத்தில் போலீஸ் அதிகாரின் அதிரடி மனைவியாக நடித்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார். அவர் தான் லிஸி ஆண்டனி.
பெண்களின் மனநிலை சொல்லும் படமாக வெளியான தரமணி படத்தில் போலீஸ் அதிகாரியின், மன அழுத்தம் கொண்ட பெண்னாக இவர் நடிப்பை வெளிப்படுத்திய விதம், அந்த கதாபாத்திரத்தை ரசிகர் மறக்க முடியாதவாறு செய்துவிட்டது. படத்தில் தான் அவர் மன அழுத்தம் கொண்ட பெண்ணாக நடித்தார், நிஜத்தில் நேர் எதிர்.
ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் படித்த லிஸி ஆண்டனி, ஸ்டெல்லா மேரீசில் பி.காம் முடித்துவிட்டு, சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் பட்டம் பெற்றதோடு, கப்பல் துறை பணியில் சேர்ந்து உலக நாடுகள் பலவற்றுக்கு சென்று வந்துள்ளவர், தற்போது கோடம்பாக்கத்தில் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருப்பது பற்றி அவரிடம் கேட்டதற்கு, வெளிநாட்டில் இருந்து சென்னை வந்ததும் ராம் சாரின் நட்பு கிடைத்தது. அப்போது தான் தங்க மீன்கள் படத்தில் ஸ்டெல்ல மிஸ் வேடத்தில் நடிக்க வைத்தார். அந்த வேடம் பெரிதும் பேசப்பட்டது. இப்போதும் என்னை அனைவரும் ஸ்டெல்லா மிஸ் என்று தான் அழைப்பார்கள், ஏன் ராம் சார் கூட இப்போதும் என்னை ஸ்டெல்லா மிஸ் என்று தான் கூப்பிடுகிறார்.
தங்க மீனகள் படத்திற்கு பிறகு பல படங்களில் நடித்துவிட்டேன். இருந்தாலும், தரமணி எனக்கு பெரிய திருப்பு முனையாக அமைந்திருக்கிறது. அந்த வேடத்தில் நான் நடிக்கும் போது கிளிசரின் போடாமலே அழுதுவிட்டேன். அந்த அளவுக்கு எனக்கு காட்சியை ராம் சார் விளக்கு கூறினார்.
சின்ன வயதில் எனது பெற்றோர்கள் சினிமா படம் பார்க்க அனுமதிக்க மாட்டார்கள். ஏன் டிவி பார்க்க வேண்டும் என்றால் கூட செய்தி மட்டும் தான் பார்க்க வேண்டும். ஆனால், நான் இப்போது நடிகையாக உருவெடுத்துள்ளேன்.
நடிப்பில் நான் யாரையும் ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளவில்லை. நான் நானாக இருக்க ஆசைப்படுகிறேன். யாரையும் பின்பற்றவும் ஆசையில்லை. நடிக்கும் கதாபாத்திரத்தின் நீளத்தை நான் பார்ப்பதில்லை, அந்த வேடத்திற்கு நடிக்கக்கூடிய வார்ய்ப்பு எப்படி இருக்கிறது என்பதை தான் பார்க்கிறேன். நெகடிவ் ரோல், பாசிட்டிவ் ரோல் என்பதையும் பார்க்க வேண்டும், வேடம் மக்களை கவரும்படி இருந்தால் போதும், எந்த வேடமாக இருந்தாலும் நடிக்க ரெடியாக இருக்கிறேன், என்று கூறிய லிஸி தற்போது 5 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...