பட வாய்ப்புக்காக நடிகைகள் படுக்கை அழைக்கப்படுகிறார்கள், என்ற குற்றச்சாட்டு திரையுலகில் பரவலாக இருக்க, தமிழ் மட்டும் இந்தி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்த மாளவிகா, மூத்த நடிகர் ஒருவரின் பாலியல் டார்ச்சரால் தான் சினிமாவை விட்டே ஒதுங்கியதாக, சர்ச்சை நடிகை ஒருவர் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.
அந்த சர்ச்சை நடிகை வேறு யாருமல்ல ஸ்ரீரெட்டி தான். பட வாய்ப்பு தருவதாக கூறி தன்னை பயன்படுத்திக் கொண்டார்கள் என்று கூறியதோடு, பல முன்னணி இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட ஏராளமான சினிமா பிரபலங்கள் பெயர்களை வெளியிட்டு பிரபலமான ஸ்ரீரெட்டி, தற்போது சென்னையில் முகாமிட்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.
அவரது புகார் எப்பிசோட் முடிந்துவிட்டது, என்று பார்த்தால், சென்னையில் இருந்தவாறு தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டியளித்து வருபவர், தனது பேஸ்புக் பக்கத்தில் தற்போது இன்னும் பலரது பெயர்களை வெளியிட இருப்பதாக தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராஜேந்திர பிரசாத் பற்றிய தகவலை விரைவில் வெளியிடுவேன், என்று கூறியிருக்கும் ஸ்ரீரெட்டி, ”மிஸ்டர் ராஜேந்திர பிரசாத், நீங்கள் ஏன் மா அமைப்பில் இருந்து 6 மாதத்தில் வெளியேறினீர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஹீரோயின் மாளவிகா ஏன் திரையுலகை விட்டு விலகினார் என்பதும் அனைவருக்கும் தெரியும். நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவர்களை எப்படி எரிச்சல் அடைய செய்வீர்கள் என்பதும் அனைவருக்கும் தெரியும். உங்களின் மகள் ஏன் வீட்டை விட்டு ஓடினார் என்பதும் அனைவருக்கும் தெரியும். நடிகை ஹேமா ஏன் உங்களுடன் சண்டை போட்டார்? ஒரு சீனியர் நடிகராக உங்களை மதிக்கிறேன், ஆனால் மனிதனாக அல்ல.” என்று நடிகர் ராஜேந்திர பிரசாத் குறித்து பரபரப்பு தகவலை பதிவிட்டுள்ளார்.
நடிகை ஸ்ரீரெட்டி கூறியிருப்பதை வைத்து பார்த்தால் நடிகை மாளவிகா சினிமாவை விட்டு ஒதுங்கியதற்கு பின்னணியில் ராஜேந்திர பிரசாத்தின் பாலியல் டார்ச்சர் இருக்குமோ, என்று சந்தேகம் ஏற்படுகிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘ஆறுபடை’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்ததோடு சினிமாவுக்கு முழுக்கு போட்ட மாளவிகா, தற்போது திருமணமாகி இரண்டு பிள்ளைகளுக்கு தயாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...