’கேளடி கண்மனி’, ’ஆசை’, ’நேருக்கு நேர்’, ’பூவெல்லாம் கேட்டுப்பார்’, ’சத்தம் போடாதே’ உள்ளிட்ட பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குநர் வசந்த் எஸ்.சாய். தற்போது ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இதில் பார்வதி , காளீஸ்வரி ஸ்ரீனிவாசன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி, சுந்தர், கருணாகரன், கார்த்திக் கிருஷ்ணா, மாஸ்டர் அம்ரீஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தற்போது ஜியோ MAMI மும்பை திரைப்பட விழா 2018 நிகழ்ச்சியில் இயக்குநர் வசந்த் சாய்யின் ’சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இவ்விழாவில் கபீர் மெஹ்தா இயக்கிய புத்தா.மூவ், தனுஜ் சந்திரா இயக்கிய எ மாண்சூன் டேட், அதுல் மோங்கியா இயக்கிய அவேக், நாகராஜ் மஞ்சுளே இயக்கிய அன் எஸ்ஸே ஆப் தி ரெயின், புத்தாடேப் தாஸ்குப்தா இயக்கிய தி ப்லைட், ஷாசியா இக்பால் இயக்கிய பிபாக் ஆகிய படங்களும் திரையிடப்படவுள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...