‘அட்ட கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’, ‘காலா’ என்று தொடர்ந்து தமிழ் சினிமாவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய திரைப்படங்களை இயக்கிய பா.ரஞ்சித், தனது நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்த முதல் படமான ‘பரியேறும் செல்வராஜ்’ படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றிருப்பதோடு, அவர் இயக்கியப் படங்களைப் போலவே, பெரும் அதிர்வலையை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது. கமஷியலாகவும் இப்படம் பெற்ற வெற்றியால், படத்தை இயக்கிய மாரி செல்வராஜும், தயாரித்த பா.ரஞ்சித்தும் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
இந்த மகிழ்ச்சிக்கரமான தருணத்தில், ஒட்டு மொத்த திரையுலகமே மகிழ்ச்சியடையும் விதத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் திரையுலகினர்களுக்காக நூலகம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
‘கூகை’ என்ற பெயரில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த நூலகம், சென்னை வளசரவாக்கம் ஜானகி நகரில் தொடங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற இந்த நூலகம் திறப்பு விழாவில், மராட்டிய இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே, நடிகை குஷ்பு, இயக்குநர் ராம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு நூலகத்தை திறந்து வைத்தார்கள்.
விழாவில் இயக்குநர் நாகராஜ் மஞ்சுளே பேசுகையில், “மராட்டிய மானிலத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு வந்து இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது, இயக்குனர் இரஞ்சித், மாரி செல்வராஜ், ராம் உள்ளிட்ட நண்பர்களுக்கு எனது நன்றிகள். இங்கு வந்ததும் பரியேறும் பெருமாள் படம் பார்த்தேன். இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் சாதி ஒரே மாதிரிதான் இன்னும் தனது வன்மத்தை காட்டிக்கொண்டு இருக்கிறது. கலைஞர்களாகிய நமக்கு சாதி ஒழிப்பைக்குறித்து நாம் நமது படைப்புகள் மூலமாக ஒரு உரையாடலை நிகழ்த்த முடியும், அந்த வகையில் ரஞ்சித்தும், மாரிசெல்வராஜையும் பாராட்டுகிறேன். என்னோடு பயணிக்க தமிழகத்தில் இருவர் இருக்கிறார்கள் என்பதில் பெரும் மகிழ்ச்சி.
கூகை திரைப்பட இயக்கம் அமைப்பு மூலமாக நூலகம் திறந்திருப்பது நல்ல முயற்ச்சி. இயக்குநர்கள், உதவி இயக்குநர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கும். வாசிப்பு என்பது திறைப்படத்துறையில் இருப்பவர்களுக்கு மிக மிக அவசியம். புத்தகம் உங்களை செழுமைப்படுத்தும். இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.
நடிகை குஷ்பு பேசும் போது, “இந்த நூலகம் உதவி இயக்குநர்களுக்கு மட்டுமல்ல, இயக்குநர்களுக்கும் அவசியமான ஒன்று. என் குழந்தைகளும் வாசிப்பு பழக்கம் இருக்கிறது. புத்தகம் படிப்பது நம்மை தைரியமானவர்களாக்கும், யாரையும் தைரியமாக எதிர்கொள்ளும் ஆற்றலை தரும். இந்த நூலகத்தை திறந்திருக்கும் இயக்குநர் பா.இரஞ்சித்திற்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார்.
இயக்குநர் பா.ரஞ்சித் பேசுகையில், “புத்தகம் மூலம் தான் உலகை அறிய முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். நான் புத்தகம் மூலம் தான் பலவற்றைத் தெரிந்து கொண்டேன். உதவி இயக்குநராக இருந்த போது ஒவ்வொரு புத்தகங்களையும் தேடித்தேடி வாசித்தேன். அப்போது தான் ஒன்று தோன்றியது. உதவி இயக்குநர்களுக்கு என்று ஒரு நூலகம் அமைக்க வேண்டும் என்று. வாசிப்பின் வழியாகவும் வாசித்ததை உரையாடுவதின் வாயிலாகவும் ஒரு படைப்பாளி நிறைய கற்றுக்கொள்ள முடியும். ஒரு படத்தைப் பார்த்தால் அதில் காட்சி வழியாக நமக்கு எல்லாம் காட்டப்பட்டு விடும். ஆனால் புத்தகம் படித்தால் தான் அந்த எழுத்துக்கு நாம் கற்பனை செய்ய முடியும். இந்த நல்விழாவிற்கு வருகை தந்த சாய்ரட் இயக்குனர், இயக்குனர் ராம் சார், தோழர் குஷ்பு அனைவருக்கும் நன்றி” என்றார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...