விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவான ‘96’ படம் நேற்று வெளியாகியுள்ளது. முன்னதாக இப்படத்தின் சிறப்புக் காட்சி அதிகாலை 5 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், திடீரென்று சிறப்புக் காட்சி ரத்து செய்யப்பட்டதால், திரையரங்கிற்கு வந்த ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
மேலும், இது தொடர்பாக தயாரிப்பாளர் ஜே.சதீஷ்குமார் வெளியிட்ட ஆடியோ பதிவு ஒன்றில், ‘96’ படத்தை தயாரித்த நந்தகோபால், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் விஷாலுக்கு பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது. அதற்காக தான் விஷால், ‘96’ படத்தை ரிலிஸாகவிடாமல் தடுத்தார் என்றும், பிறகு நந்தகோபால் தர வேண்டிய பணத்தை விஜய் சேதுபதி கொடுக்க முன் வந்ததால், படம் வெளியானது என்றும் கூறியதோடு, இது தொடர்பாக விஷால் விளக்கம் அளிக்க வேண்டும், என்றும் கூறியிருந்தார். இந்த தகவல் நேற்று பல ஊடகங்களில் செய்தியாக வெளியானது.
இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இன்று விளக்கம் அளித்திருக்கும் விஷால், தயாரிப்பாளர் நந்தகோபாலுக்கு பைனான்ஸ் மூலம் தான் ரூ.1.50 கோடி பெற்றுக் கொடுத்தேன். அவர் அந்த தொகையை ‘96’ படம் ரிலிஸின் போது கொடுப்பதாக உறுதியளித்தார். அதனால் தான், 96 படம் வெளியாகும் போது, நந்தகோபலிடம் அந்த ரூ.1.50 கோடி குறித்து பேச்சு வார்த்தை நடத்தினோம். ஆனால், இந்த சம்பவத்திற்குப் பிறகு விஷால் நேற்று முழுவதும் உறங்கவே இல்லை.
பைனான்ஸ் ரீதியாக விஷால், தொடர்ந்து பல வலிகளை அனுபவித்து வருகிறார். அந்த வலியை விஜய் சேதுபதியும் அனுபவிக்க கூடாது என்று நினைத்த அவர், நந்தகோபாலுக்காக விஜய் சேதுபதி கொடுப்பதாக கூறிய ரூ.1.50 கோடியை அவர் தர வேண்டாம் என்று கூறிவிட்டாராம். அந்த தொகையை நந்தகோபாலிடமே பெற்றுக்கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கும் விஷால், அந்த தொகைக்கு தானே வட்டிக் கொள்ளவும் முடிவு செய்துவிட்டாராம்.
தயாரிப்பாளருக்கு பைனான்ஸ் வாங்கிக்கொடுத்து, அதன் வலியை தான் அனுபவித்து வருவது போல, தற்போது விஜய் சேதுபதியும் அதே சிக்கலில் ஈடுபட்டு, அந்த வலியை அனுபவிக்க கூடாது, இந்த பிரச்சினையில் இருந்து அவர் வெளியே வந்து, பொருளாதாரா ரீதியாக அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், என்று கூறிய விஷால், ‘96’ படத்திற்கு வாழ்த்தும் தெரிவித்திருக்கிறாராம்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...