ஒரு டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ்குமார், தற்போதைய தமிழ் சினிமாவில் ஒரு ஆண்டில் அதிகமான படங்களில் நடிக்கும் ஹீரோவாக உருவெடுத்துள்ளார்.
இந்த நிலையில், ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்திருக்கும் ‘சர்வம் தாள மயம்’ படம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
‘மின்சார கனவு’, ‘கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ராஜீவ் மேனன் இயக்கியுள்ள ‘சர்வம் தாள மயம்’ படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
ஒரு மிருதங்க வித்வானிடமிருந்து கலையை கற்றுக்கொள்ள விரும்பும் ஒரு இளைஞன் பிற்படுத்தப்பட்ட குடும்பத்தை சார்ந்தவன் என்பதால் அவரிடமிருந்தும், கர்நாடக இசை சமூகத்தில் இருந்தும் நிராகரிக்கப்படுகிறான்.
இன்றைய காலக்கட்டத்தில் சாதி மத பிரச்சினைகளை தாண்டி அவனது இசை ஆசை வென்றதா, என்பதே படத்தின் கதை.
ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் நெடுமுடி வேணு, அபர்ணா பாலமுரளி, வீனித், டி டி உள்ளட்ட பலர் நடித்துள்ளனர்.
காஷ்மீர், ஷில்லாங், ஜெய்பூர், கேரளா உள்ளிட்ட பல இடங்களில் உருவாகிய இப்படம், தற்போது 31 வது டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேகமாக திரையிடப்பட தேர்வாகியுள்ளது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...