பட வாய்ப்பு வேண்டுமானால் நடிகைகள் படுக்கையை பகிர்ந்துக் கொள்ளும் நிலைக்கு நடிகைகள் தள்ளப்பட்டிருப்பதாக, பல நடிகைகள் வெளிப்படையாக பேட்டியளித்து வருகிறார்கள். தற்போது கூட நடிகை தனுஸ்ரீ தத்தா, நடிகை நானா படேகார் மீது பாலியல் புகார் கூறி வருகிறார்.
இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக பெண் இயக்குநரும் எழுத்தாளருமான விண்டா நந்தா புகார் தெரிவித்திருக்கிறார்.
இந்தி திரைப்படங்களில் அப்பா உள்ளிட்ட குணச்சித்திர வேடங்களில் நடித்த ஆலோக் நாத், சினிமா மட்டும் இன்றி டிவி சீரியல்களிலும் நடித்து வந்தார். நாடக பின்னணியில் இருந்து வந்த இவர் மீது தான், பெண் இயக்குநர் விண்டா நந்தா பாலியல் புகார் சுமத்தியுள்ளார்.
இது குறித்து இயக்குநர் விண்டா நந்தா, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “என் நெருங்கிய தோழியின் கணவர் அவர். நான் அவர்கள் வீட்டிற்கு செல்வேன், அவர்களும் என் வீட்டிற்கு வருவார்கள். நாங்கள் அனைவரும் நாடக பின்னணி கொண்டவர்கள். நான் டிவியின் நம்பர் ஒன் நிகழ்ச்சியான தாரா சீரியலை தயாரித்து, எழுதினேன். அந்த நபர் என் கதையின் ஹீரோயின் மீது கண் வைத்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு அவரை பிடிக்கவில்லை.
அந்த நடிகர் மது அருந்தும் பழக்கம் உள்ளவர், வெட்கம் கெட்டவர். ஆனால் தசாப்தத்தின் சிறந்த தொலைக்காட்சி நடிகர் அவர் தான். அதனால் அவர் செய்த மோசமான காரியங்களை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என் தாரா சீரியலின் ஹீரோயினுக்கு அவர் தொல்லை கொடுத்தார். இருப்பினும் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். அந்த பெண் புகார் அளித்ததை அடுத்து அவரை சீரியலில் இருந்து வெளியேற்ற முடிவு செய்தோம்.
கடைசி ஷாட் எடுக்க வேண்டி இருந்தது. அதன் பிறகு அவரை வெளியே அனுப்ப முடிவு செய்தோம். இதை தெரிந்து கொண்ட அவர் குடித்துவிட்டு செட்டுக்கு வந்தார். செட்டில் உட்கார்ந்து குடித்தார். அவரின் காட்சி வந்தபோது எங்கள் சீரியல் ஹீரோயின் மீது விழுந்தார். அந்த பெண் அவரை ஓங்கி அறைந்துவிட்டார். அதன் பிறகு அந்த நடிகரை கிளம்பச் சொல்லிவிட்டோம்.
ஒரு பார்ட்டிக்கு என்னை ஒருவர் அழைத்தார். அவரின் மனைவியான என் நெருங்கிய தோழி ஊரில் இல்லை. ஆனால் தியேட்டர் குரூப்பை சேர்ந்தவர்கள் அடிக்கடி சந்திப்பதால் எனக்கு சந்தேகம் ஏற்படவில்லை. பார்ட்டிக்கு சென்ற இடத்தில் என் மதுவில் ஏதோ கலந்துவிட்டார்கள். எனக்கு ஒரு மாதிரியாக இருந்தது. இரவு 2 மணிக்கு அந்த வீட்டில் இருந்து கிளம்பினேன். என்னை யாருமே டிராப் செய்யவில்லை. அது எனக்கு வித்தியாசமாக இருந்தது.
இரவு நேரத்தில் ஆள் இல்லாத தெருவில் நடந்தபோது ஒருவர் தன் காரில் வந்து என்னை வீட்டில் டிராப் செய்வதாக கூறினார். நானும் அவரை நம்பி காரில் ஏறினேன். அதன் பிறகு நடந்தது எனக்கு சரியாக நினைவில் இல்லை. என் வாயில் மது ஊற்றப்பட்டது தெரிந்தது. என்னை ஏதோ செய்கிறார் என்று தெரிந்தது. மறுநாள் மதியம் கண் விழித்தபோது உடம்பு வலித்தது. என்னை பலாத்காரம் செய்ததோடு மட்டும் அல்லாமல் என் வீட்டில் வைத்தே என்னை கஷ்டப்படுத்தியிருக்கிறார். என்னால் படுக்கையில் இருந்து எழ முடியவில்லை.” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...