பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் வெளியான அஜித்தின் ‘விவேகம்’ படம் அஜித் ரசிகர்களை மட்டும் அல்லாத திரையுலகினரையும் பெரும் ஏமாற்றமடைய செய்துவிட்டது.
ஹாலிவுட் தரத்திலும், தொழில்நுட்பத்திலும் படம் உருவாகியிருந்தாலும், கதை அமைப்பும், திரைக்கதை வடிவமைப்பும் மக்களுக்கு படத்தை புரியாத வகையில் கொண்டு செல்வது தான் படத்தின் மிகப்பெரிய பலவீனமாக அமைந்திருக்கிறது. அதேபோல், படத்தில் பாடல்களும் பெரிதாக எடுபடாததோடு, அஜித்தும் தனது முந்தைய படங்களில் செய்ததையே இந்த படத்திலும் செய்திருப்பது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் அளித்தது.
மேலும், படம் குறித்து வெளியான அனைத்து விமர்சனங்கள், தமிழ் சினிமாவில் இதுபோன்ற ஒரு மொக்கையான படம் அதுவும், அஜித் போன்ற ஓபனிங் அதிகமுள்ள ஒரு மாஸ் ஹீரோ இப்படிப்பட்ட கதையை எப்படி தேர்வு செய்தார், என்ற ரீதியில் வெளிவந்துள்ளது. அதேபோல், முதல் காட்சிக்கு பிறகு சென்னையை உள்ளிட்ட பெரு நகரங்களை தவிர்த்து, பல்வேறு பகுதிகளில் தியேட்டர்களில் கூட்டம் குறைந்துவிட்டதாக கூறப்பட்டதுடன், ஆன்லைனிலும் படம் வெளியாகிவிட்டது. இதனால், விவேகம் வசூலில் மிகப்பெரிய பாதிப்பை சந்திக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த எதிர்ப்பார்ப்பை அஜித் ரசிகர்கள் உடைத்தெரிந்துள்ளனர்.
நெகட்டிவான விமர்சனங்கள் வந்தாலும், முதல் நாளை காட்டிலும், இரண்டாம் நாளில் ‘விவேகம்’ அதிகமாக வசூல் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாளில் சென்னையில் மட்டும் ரூ.1.25 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாம் நாளான்று ரூ.30 லட்சம் கூடுதலாக வசூலாகியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், சனிக்கிழமையும், இன்றும் நல்ல வசூல் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது. நெகட்டிவ் விமர்சனம் வந்த எந்த படமும் இது போல அதிகமான வசூலை ஈட்டியதில்லை என்றும் கூறப்படுகிறது.
மொத்தத்தி, தல தல தான் என்பதை நிரூபிக்கும் வகையில் அஜித்தின் ‘விவேகம்’ படத்தின் வசூல் சூடுபிடிக்க தொடங்கியிருக்கிறது. இருந்தாலும், இனி சிவாவுடன் அஜித் படம் பண்ணக் கூடாது. வேறு ஒரு இயக்குநருடன் அவர் படம் பண்ண வேண்டும் என்றே அவரது ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தையும் சிவா தான் இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுளளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...