தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருப்பதோடு, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் நயந்தாரா, தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வெற்றிப் பெற்று வருகிறார்.
நயந்தாராவும், நடிகர் சிம்புவும் காதலித்ததோடு, கருத்து வேறுபாட்டால் பிரிந்ததும் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், அவர்கள் இருவருக்கும் இடையே, இதுவரை வெளிவராத ரகசியம் ஒன்றை இயக்குநர் ஒருவர் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அதாவது, நயந்தாராவும், சிம்புவும் ஏற்கனவே திருமணம் செய்துக் கொண்டதாக ’கெட்டவன்’ படத்தின் இயக்குநர் ஜி.டி.நந்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இது குறித்து பேட்டியில் கூறிய நந்து, நயந்தாராவும், சிம்புவும் கிறிஸ்தவ முறைப்படி மோதிரம் மாற்றி திருமணம் செய்துக்கொண்டதாக, தெரிவித்துள்ளார்.
மேலும், சிம்புவின் குடும்பத்திற்கு ஜோதிடம் மீது அதிகமான நம்பிக்கை உள்ளது. சிம்பு - நயந்தாரா சேவார்களா? என அவர்கள் ஜோதிடரிடம் கேட்டதற்கு, இருவரும் தனியாக இருந்தால் தான் நல்ல வாழ்க்கை இருக்கும், என ஜோதிடர் ஒருவர் கூறியதால் தான், அவர்கள் இருவரும் பிரிந்திருக்க கூடும், என்றும் இயக்குநர் ஜி.டி.நந்து தெரிவித்துள்ளார்.
சிம்புவும், நயந்தாராவும் பிரிந்த பிறகு ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொள்ளாமல் இருந்த நிலையில், நயந்தாரா பிரபு தேவாவை காதலித்து அவரையும் பிரிந்த பிறகு, சிம்புவிடம் நட்பாக பழக தொடங்கியதோடு, அவருக்கு ஜோடியாக ‘இது நம்ம ஆளு’ படத்திலும் நடித்தார். அதே சமயம் அவர், தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவதோடு, அவருடன் லிவிங் டூ கெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நயந்தாரா - சிம்பு குறித்து இயக்குநர் ஜி.டி.நந்து வெளியிட்டிருக்கும் தகவல், சிம்பு மற்றும் நயந்தாரா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...