Latest News :

சின்மயி தெரிவிக்கும் பாலியல் புகார் உண்மையே! - சமந்தாவின் பதிவால் பரபரப்பு
Thursday October-11 2018

கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் தெரிவித்து வரும் பாடகி சின்மயிக்கு நடிகை சமந்தா ஆதரவு தெரிவித்திருக்கிறார்.

 

சுவிட்சர்லாந்துக்கு சென்ற போது, அங்கு வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி புகார் தெரிவித்துள்ளார். மேலும், அந்த சம்பவம் தொடர்பாக தான் ஆதாரங்களையும் பெரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், அவர் கூறியுள்ளார்.

 

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் பாடகி சின்மயிக்கு ஆதரவு தெரிவித்திருக்கும் நடிகை சமந்தா, சின்மயி கூறுவது அனைத்தும் உண்மையே, என்றும் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இது குறித்து சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், “டியர் ராகுல், சின்மயி. எனக்கு உங்கள் இருவரையும் 10 ஆண்டுகளாக தெரியும். நீங்கள் மிகவும் நேர்மையானவர்கள். இந்த குணம் தான் நம் நட்பில் நான் அதிகம் மதிப்பது. நீங்கள் சொல்வது உண்மையே !! #istandwithchinmayi” என்று பதிவிட்டுள்ளார்.

 

மேலும், ”சம்பவம் நடந்து 13 ஆண்டுகள் கழித்து தற்போது ஏன் சின்மயி பேச வேண்டும்?” என்று ஒருவர் கேள்வி எழுப்பியதை பார்த்த சமந்தா,  ”ஏனென்றால் நாங்கள் பயந்துவிட்டோம். இது எங்களின் தவறு என்று நீங்கள் ஆக்கிவிடுவீர்கள் என்று.” என்று பதில் அளித்துள்ளார்.

 

பாலியல் தொல்லை கொடுப்பவர்களின் பெயர்களை தொடர்ந்து ட்விட்டரில் வெளியிட்டு வரும் சின்மயி, 

பாலியல் தொல்லை குறித்து தற்போது பேச முடிவு செய்தேன். ஏனென்றால் இது தான் சரியான நேரம். இது மக்கள் இயக்கமாக மாறாமல் இருந்திருந்தால் வெளிப்படையாக பேசும் தைரியம் எனக்கு வந்திருக்காது. இந்த விஷயங்களை எல்லாம் என் மனதில் வைத்து பூட்டியிருப்பேன், என்றும் தெரிவித்திருக்கிறார்.

 

சின்மயின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு பலர் வரவேற்பு தெரிவிப்பது போல, பலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 


Related News

3576

”’இந்தியன் 2’ படம் 5 வருடம் ஆகக் காரணம் நாங்கள் அல்ல” - கமல்ஹாசன் விளக்கம்
Wednesday June-26 2024

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள ‘இந்தியன் 2’ படம் இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!
Wednesday June-26 2024

அஜித் குமார் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கிய இயக்குநர் விஷ்ணு வர்தன், பாலிவுட் பக்கம் போனதால் தமிழில் படம் இயக்காமல் இருந்தார்...

சன்னி லியோனுடன் கைகோர்த்த பிரபு தேவா!
Wednesday June-26 2024

எஸ்.ஜே.சினு இயக்கத்தில், பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட்ட ராப்’...