நடிகைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சீண்டல்கள் குறித்து தற்போது பலர் பேச தொடங்கியுள்ளார்கள். பல நடிகைகள் இது குறித்து வெளிப்படையாகப் பேசினாலும், தாங்கள் யாரால் பாதிக்கப்பட்டோம், என்பதை மட்டும் கூறுவதில்லை.
இதற்கிடையே, பாடகி சின்மயி வைரமுத்து மீது கூறிய பாலியல் புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை தொடர்ந்து சில நடிகைகளும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் குறித்து பேசி வருகிறார்கள்.
இந்த நிலையில், தனுஷின் ‘அனேகன்’ படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுமகான அமைரா தஸ்தூர், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் தனக்கு நேர்ந்த பாலியல் சீண்டல் குறித்ஹ்டு பேசியிருக்கிறார்.
இது குறித்து கூறிய அமைகா தஸ்தூர், “எனக்கும் பாலிவுட், தென்னிந்தியத் திரையுலகில் பாலியல் சீண்டல்களுக்கும், அதைத் தொடர்ந்து மன உளைச்சல்களுக்கும் ஆளாகியிருக்கிறேன்.
என்னுடன் நடித்த நடிகர், என்னைத் தவறான முறையில் இறுக்கினார். அதை உணர்ந்த நான் இயக்குநரிடம் புகார் செய்தபோது, அதை அவர் கண்டுகொள்ள வேண்டாம் எனத் தெரிவித்தார். வேண்டுமென்றே படக்காட்சியைத் தாமதமாகப் பதிவுசெய்தனர்.
சில இடங்களில், அந்த நடிகரை உதாசீனப்படுத்தியதைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் அந்த நடிகரிடம் என்னை மன்னிப்பும் கேட்கச் சொன்னார். என்னிடம் தவறாக நடந்தவர்கள் யாரென்று நான் இப்போது கூற மாட்டேன். அவர்கள், இந்தத் துறையில் மிகவும் பலம் வாய்ந்தவர்கள். அவர்கள் எனக்கு என்ன செய்தார்கள் என்றும், யாரென்றும் அவர்களுக்கே தெரியும். ஒரு நாள், அவர்கள் யாரென்று பெயரை சொல்வேன்.” என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...