விஜயின் ‘சர்கார்’ வரும் தீபாவளிக்கு வெளியாகப் போவதால் விஜய் ரசிகர்கள் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறார்கள். கடந்த தீபாவளிக்கு வெளியான ‘மெர்சல்’ படத்தைக் காட்டிலும் ‘சர்கார்’ படத்தில் ஏகப்பட்ட அரசியல் வசனங்களும், அரசியல் பின்னணியும் இருப்பதால், படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
‘சர்கார்’ படத்தின் மீது ஏற்பட்டுள்ள எதிர்ப்பார்ப்பால், தீபாவளியன்று வேறு எந்த படங்களும் வெளியாகாமல் இருக்க, விஜயுடன் ஒருவர் மட்டும் தைரியமாக மோத தயராகிவிட்டார். அவர் யார்? என்பது தெரிந்தால், பலருக்கு ஹார்ட் அட்டாக் வருவதோடு, இந்த செய்தியை பதிவிட்ட எங்களையும் அட்டாக் செய்யாமல் இருக்க மாட்டீங்க, அந்த அளவுக்கு அவர் டெரர் ஆனாவர்.
அவர் தான், ‘கோல்டு ஸ்டார்’ கோபி காந்தி. ‘முதல் மாணவன்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் அறிமுகமான கோல்டு ஸ்டார் கோபி காந்தி, அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தனது ஆர்.எஸ்.ஜி.பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ‘வைரமகன்’ என்ற படத்தை தயாரித்து, ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் தான் தீபாவளியன்று விஜயின் ‘சர்கார்’ படத்துடன் மோதுகிறது.
அம்மாவின் மீது பெரும் பாசம் கொண்ட விவசாயத் தொழிலாளிக்கு, திருமணத்திற்கு பெண் தேடி அலையும் அவரது அம்மா, ஒரு விபத்தில் சுய நினைவை இழந்து தனக்கு மகன் இருப்பதையே மறந்து பழைய நினைவுகள் அனைத்தையும் மறந்து விடுகிறார். அந்த மகன் தனது தாயைத் தேடி பல்வேறு இடங்களுக்கு அலைகிறார். அதற்காக ஒரு பெண்ணை காதலிக்க ஆரம்பிக்கிறார். காணாமல் போன தாயை கண்டுபிடித்தாரா?, காதலியை கரம் பிடித்தாரா? என்பதை குடும்பத்துடன் ரசிக்கும் அளவிற்கு செண்டிமெண்ட் மற்றும் காமெடி கலந்து சொல்லியிருக்கிறார்களாம்.
நான்கு பாடல்கள் உள்ள இப்படத்தின் ஒரு பாடல் விவசாயிகளின் கஷ்ட்டத்தையும், பெருமைகளையும் சொல்லும்படி எழுதப்பட்டுள்ளது. அப்பாடலை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டார்.
நாமக்கல், சேலம், கரூர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள ‘வைரமகன்’ படப்பிடிப்பு ஆரம்பத்தில் இருந்தே பல்வேறு தடங்கள்களை சந்தித்து வந்ததோடு, 40 நாட்களில் முடிவடைய வேண்டிய படப்பிடிப்பு 100 நாட்களுக்கு மேல் நடைபெற்றதாம். இயற்கைகளும், செயற்கைகளும் பல்வேறு வகையில் படப்பிடிப்பு நடத்த முடியாமல் தடை செய்ததோடு, கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களாலும் தடைகள் வந்ததாம். அதுமட்டும் இல்லாமல், தொழில்நுட்ப கோளாறு காரணமாக எடுத்த காட்சிகள் அனைத்தும் அழிந்துவிட்டதாம்.
இப்படி பல தடைகளை கடந்து ஒருவழியாக ‘வைரமகன்’ படத்தை நிறைவு செய்திருக்கும் கோல்டு ஸ்டார் கோபி காந்தி, தீபாவளிக்கு படத்தை வெளியிடுகிறார்.
இப்படத்தில் ஹீரோயினாக சுகன்யாஸ்ரீ, சுதா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்கலுடன் நெல்லை சிவா, போண்டா மணி, விஜய் கணேஷ், அப்பு போன்ற காமெடி நடிகர்களும் நடித்துள்ளனர்.
ராஜுகீர்த்தி எட்டிஞ் செய்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.எஸ்.சூர்யா இசையமைத்திருக்கிறார். முருகவேல் இயக்கியிருக்கிறார். இப்படத்தை கோல்டு ஸ்டார் கோபி காந்தியே சொந்தமாக வெளியிடுகிறார்.
மேலும், தனது ஆர்.எஸ்.ஜி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் கோல்டு ஸ்டார் கோபி காந்தி தயாரித்து நடித்துள்ள ‘வீரக்கலை’ படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் பொங்கல் பண்டிகைக்கு வெளியிடவும் முடிவு செய்திருக்கிறார்.
மேலும், அடுத்த ஆண்டு இரண்டு படங்களை தயாரித்து நடிக்க முடிவு செய்திருக்கும் கோல்டு ஸ்டார் கோபி காந்தி, ‘வைரமகன்’ படத்தை தீபாவளியன்று திரையரங்கில் வெளியிடுவதோடு, தொலைக்காட்சி, இணையதளம் ஆகியவற்றிலும் வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...
தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...