24 ஏ.எம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், நயந்தாரா இணைந்து நடித்துள்ள ‘வேலைக்காரன்’ படத்தை மோகன் ராஜா இயக்கி வருகிறார். ‘தனி ஒருவன்’ படத்திற்குப் பிறகு மோகன் ராஜா இயக்கும் படம் என்பதாலும், நயந்தாரா முதன் முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்திருப்பதாலும் படத்தின் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் விரைவில் வெளியாக உள்ள நிலையில், ஒரு பாடலை மட்டும் இன்று வெளியிடுகின்றனர். இன்று மாலை 6 மணியளவில் வெளியாக உள்ளது இந்த பாடல் செம குத்து பாடலாம். கேட்பவர்களை ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு செம குத்துப் பாட்டாக வந்துள்ளதாம்.
சமூக பிரச்சினையை மையப்படுத்தி படமாக உருவாகும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில், வில்லனாக நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், சினேகா, ரோகினி, ஆர்.ஜே.பாலாஜி, தம்பி ராமைய்யா, சதீஷ், விஜய் வசந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
சென்னை குடிசைப் பகுதி போன்ற பிரம்மாண்ட செட்டில் படமாக்கப்பட்ட இப்படம், மலேசியாவிலும் பெரும்பகுதி படமாக்கப்பட்டுள்ளது. சமூக பிரச்சினையோடு ஆக்ஷன் படமாகவும் உருவாகியுள்ள ‘வேலைக்காரன்’ செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி வெளியாகிறது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...