Latest News :

அரவணைக்க நினைத்த அமலா பால் - விலகிச் சென்ற இயக்குநர்
Sunday October-14 2018

விஜய், விக்ரம் என்று முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம் பிடித்த உடனேயே தனது காதலர் இயக்குநர் விஜயை திருமணம் செய்துக் கொண்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தவர் அமலா பால்.

 

திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்தவர், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றார். விவாகரத்துக்குப் பிறகு நடிப்பில் கவனம் செலுத்தியவர், தற்போது தமிழ், மலையாலம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து வருவதோடு, பாலிவுட்டிலும் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.

 

இந்த நிலையில், அமலா பாலின் 35 வது படமான ‘ராட்சசன்’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றிருப்பதாக அப்படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதற்காக, நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்த ‘ராட்சசன்’ படக்குழுவினர், ரசிகர்களுக்கும், ஊடகங்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு, இந்த படத்தை மக்கள் ஏற்றுக்கொள்வாரக்ளா? என்ற பயம் இருந்தது. ஆனால், எங்களது பயத்தை ரசிகர்கள் தகர்த்தெரிந்து படத்திற்கு பெரும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள், என்று கூறினார்கள்.

 

படத்தின் ஹீரோயின் அமலா பால் பேசும் போது, “இந்த படத்தின் கதையை இயக்குநர் ராம்குமார் சொன்னவுடன் இதில் நிச்சயம் நடிக்க வேண்டும் என்று எண்ணியதோடு, நடித்து முடித்த பிறகு படம் எப்போது வெளியாகும், என்ற எதிர்ப்பார்ப்பிலும் இருந்தேன். இந்த படத்தின் மீது என்னை விட எனது மேனஜர் மிகப்பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். அவர் தான் இந்த படத்தில் நான் நடித்தே ஆக வேண்டும் என்று கூறினார். அப்படி நம்பிக்கை வைத்தவர்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. ‘ராட்சசன்’ படத்தை பார்த்து முடித்ததும், இயக்குநர் ராம்குமாரை கட்டிப்பிடிக்க நினைத்து அவரிடம் சென்றேன், ஆனால் அவரோ பின்னாள் தள்ளிப் போய்விட்டார்.” என்றார்.

 

படத்தின் ஹீரோ விஷ்ணு விஷால், ‘ராட்சசன்’ படம் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படம் என்பதால், ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற பயம் இருந்தது. ஆனால், பத்திரிகையாளர் காட்சிக்கு பிறகு அந்த பயம் சற்று குறைந்தது. பிறகு ரசிகர்கள் படம் பார்த்த பிறகு முழு பயமும் போய்விட்டது. தற்போது படத்தை ரசிகர்கள் கைதட்டி ரசிக்கிறார்கள். இது இயக்குநருக்கு கிடைத்த வெற்றி. இந்த வெற்றியின் மூலம், வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்கள் மீது எனக்கு பெரிய நம்பிக்கை வந்திருக்கிறது. இனி தொடர்ந்து இதுபோன்ற படங்களில் நடிப்பேன்.” என்றார்.

 

Ratchasan Success Meet

 

இயக்குநர் ராம்குமார் பேசும் போது, “’ராட்சசன்’ படத்தின் 99 சதவீதம் நல்லபடியான விமர்சனங்கள் வந்தன. விமர்சனங்களை பார்த்ததுமே படம் ஹிட் என்று நான் முடிவு செய்துவிட்டேன். அதேபோல், தற்போது படம் மிகப்பெரிய வெற்றிப் பெற்றிருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் யார்? என்று பலர் என்னிடம் கேட்கிறார்கள், நிச்சயம் அவரை மக்களுக்கு இன்னும் சில நாட்களில் அறிமுகம் செய்வேன். அவர் போட்ட மேக்கப் ரொம்பவும் கஷ்ட்டமானது. நான்கு மணி நேரம் தாங்க கூடிய அந்த மேக்கப்பில் அவர் 8 மணி நேரம் நடித்தார். அவர் பெயர் சரவணன், அவர் யார் என்பதை விரைவில் அறிமுகம் செய்வேன்.

 

இந்த கதையை நான் டில்லி பாபு சாரிடம் சொன்ன உடனே அவர் ஓகே சொல்லிவிட்டார். அதில் இருந்து இந்த படத்திற்கு பாசிட்டிவான வைப்ப்ரேஷன் தான் வந்தது. படத்தை முடித்ததும், அதை வெளியிட டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் முன் வந்தது, அவர்களுக்கும் நன்றி.” என்றார்.

 

தயாரிப்பாளர் டில்லி பாபு பேசும் போது, “’ராட்சசன்’ படத்தின் வெற்றிக்கு ராம்குமார் தான் சொந்தக்காரார். அவரால் மட்டுமே இந்த படத்தை இப்படி சிறப்பாக இயக்க முடியும். அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்ற நான் ரெடியாக இருக்கிறேன்.” என்றார்.

 

இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில் ரீமேக் செய்ய தற்போது பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதோடு, ஆங்கிலத்திலும் இப்படத்தை எடுக்க சிலர் பேசி வருகிறார்களாம்.

Related News

3593

’நாகபந்தம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட ராணா டகுபதி!
Monday January-13 2025

நடிகர் விராட் கர்ணா - அபிஷேக் நாமா- கிஷோர் அன்னபு ரெட்டி - NIK ஸ்டூடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான ' நாக பந்தம் ' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி நட்சத்திர நடிகரான ராணா டகுபதி வெளியிட்டார்...

உழவர் விருது தொடர்ந்து நடத்துவது ஏன் ? - நடிகர் கார்த்தி விளக்கம்
Monday January-13 2025

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுண்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2025’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது...

கோலாகலமாக நடைபெற்ற ‘அகத்தியா’ கேம் மற்றும் 2 வது பாடல் வெளியீட்டு விழா!
Monday January-13 2025

தமிழ் சினிமாவில் புதிய வரலாற்றை படைக்கும் வகையில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘அகத்தியா’...

Recent Gallery