பிரபல ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன், இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ‘கோலி சோடா’ மாபெறும் வெற்றி பெற்றதை. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘கோலி சோடா 2’ என்ற தலைப்பில் விஜய் மில்டன் இயக்கி வருகிறார்.
விஜய் மில்டனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ரஃப் நோட் தயாரிக்கும் இப்படத்தில் சமுத்திரக்கனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக, ‘கடுகு’ படத்தில் கதாநாயகியாக நடித்த சுபிக்ஷா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அந்த தகவலை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர்.
இந்த நிலையில், ‘கோலி சோடா 2’ படத்தின் டீசர் ஒன்றை விரைவில் வெளியிட உள்ள விஜய் மில்டன், அந்த டீசரின் ஆரம்பத்தில் இயக்குநர் கவுதம் மேனனை பேச வைத்துள்ளார். அவரது குரல் டீசருக்கு மேலும் வலுவூட்டும் வகையில் அமைந்திருப்பதாக சமீபத்தில் விஜய் மில்டன் தெரிவித்திருந்தார்.
தற்போது டீசர் முழுவதும் நிறைவடைந்துள்ள நிலையில், செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி டீசரை வெளியிட விஜய் மில்டன் முடிவு செய்துள்ளார். கவுதம் மேனனின் குரல் பலத்தோடு உருவாகியுள்ள ’கோலி சோடா 2’ படத்தின் டீசர் நிச்சயம் ரசிகர்களை கவரும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக சதம் அடித்த 'இசை அசுரன் ' ஜீ...
சமீபத்தில் வெளியான ‘மிஸ்டர்...
இன்வெஸ்டிகேசன் திரில்லர் பாணியில், பரபரப்பான திரைக்கதையில், ’8 தோட்டாக்கள்’ வெற்றி நடிப்பில் வெளியான ’மெமரீஸ்’ படத்தினை இயக்கிய ஷ்யாம் - பிரவீன் வெற்றிக்கூட்டணி இயக்கியிருக்கும் புதிய படம் ‘தி ஸ்மைல் மேன்’...